கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சிந்தனையின் மொத்த வடிவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தஃவாவை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவரே மர்ஹூம் அல் கஸ்ஸாலி அவர்கள். மூன்று தசாப்தங்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஊறித்திழைத்து பெரும் அறிவு வளர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கொண்டிருந்த அவரது மரணம் இஸ்லாமிய உம்மத்துக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு எனத் துணிந்து கூறலாம். தனது எண்பது வயதிலும் இஸ்லாமிய சிந்தனை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருபத்தைந்து வயது வாலிபத்தின் இளமையை எம்மால் தரிசிக்க முடிகின்றது. இப்பெரும் அறிவுஜீவியின் அனுபவங்கள், புரட்சிகரமான கருத்துக்கள் ஏனைய எல்லோரையும் விட அவரை தனித்துவமானவராக அடையாளப்படுத்தி இருக்கின்றன.
குற்றுயிராய்க் கிடக்கும் இஸ்லாமிய உம்மத்தை தூக்கி நிறுத்தி இஸ்லாமிய ஜீவிதத்தை அதன் நரம்பு நாளங்களில் பாய்ச்சுவதற்கான முதன்மையான ஆயுதம் சுயவிமர்சனமே என்று அவர்கள் கருதி வந்தார்கள். இங்கு இஸ்லாமிய தஃவா குறித்து அவருடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், இன்றைக்கு தஃவா களத்தில் இருப்பவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் தருகின்றோம்.
(இவர் எழுதிய, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது. இப் புத்தகத்தின் ஒரு பகுதியே இவ்வாக்கம்)
