Showing posts with label உளவியல். Show all posts
Showing posts with label உளவியல். Show all posts

Thursday, August 28, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி-2


doctor isni


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

(இக்கட்டுரையின் முதலாம் பகுதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம் திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி 1



ஒரு முறை நபித்தோழர்களில் ஒருவருக்கு மிகுந்த கடுமையான வறுமை நிலை ஏற்பட்டது. அவரது மனைவி நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரிடம் உதவி கேட்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் உதவி பெறும் நோக்கில் நபி (ஸல்)அவர்களின் அவையில் சென்று உட்கார்ந்து கொண்டார். மேலும் நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை எப்போது தன்மீது விழும் என்ற அவாவுடன் நபியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை அத்தோழர் மீது விழுந்தது, அவரும் தனது நிலைமையை எடுத்தியம்ப தக்க தருணம் இதுதான் என எண்ணி தனது பிரச்சினையை கூற வாய் திறக்க முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறலானார்:

ஒரு நபர் என்னிடம் தனது தேவைகளின் நிமித்தம் உதவி பெற வருகிறார் என்றால் நிச்சயமாக நாம் அதை அவருக்கு நிறைவேற்றிக் கொடுப்போம், ஆனால் அவர் தன்னிலையை வெளிப்படுத்தாது இறை நியதியை பொருந்திக் கொள்வாரேயானால் தன்னிறைவுமிக்க வசதியான வாழ்வை அல்லாஹ் அவருக்கு வழங்குவான் எனக் கூறினார்.

Monday, August 18, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்)




doctor isni

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டார்கள்; இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவுகூர்வதால்  இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக                               (அர்ரஃது 28)

அறிமுகம்
ஒரு மனிதன், அவன் பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் தனது அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக தனது ஆயுளை கழிக்கின்றான். இத்தகைய மனிதன் சில அடைவுகளை குறிக்கோளாக கொண்டு தனது வாழ்கைப் பாதையை, அந்த இலக்குகளை நோக்கியதாக நகர்த்திச் செல்கின்றான். இவ்வாறு எதிர் நீச்சல் போடும் மனித வாழ்வில் சில சமயங்களில் முன்னேற்றங்களும் சில சந்தர்ப்பங்களில் தடங்கள்களும் ஏற்படுவது என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கையின் நியதிகளில் ஒன்றாகும்.

நாம் அனைவரும் நம் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பல இழப்புகளிற்கும் பல இன்னல்களிற்கும், பல துக்ககரமான நிகழ்வுகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இத்தகு சூழ்நிலைகளின் போது சர்வ சக்தனான அல்லாஹ்வின் மீதுள்ள பற்றுறுதியும், திடமான நம்பிக்கையும் எமக்கு ஆறுதல் அளிப்பதாகவும், பொறுமை கொள்ளச் செய்வதாகவும் அமைந்து விடுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

எவ்வாறாயினும் மனிதன் என்ற ரீதியில் இவ்வாறான சில கடினமான சந்தர்ப்பங்களில் மனிதன் இயல்பாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி துவண்டு விழுந்து விடுகின்றான் என்பதே உண்மை.