Monday, August 18, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்)




doctor isni

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டார்கள்; இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவுகூர்வதால்  இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக                               (அர்ரஃது 28)

அறிமுகம்
ஒரு மனிதன், அவன் பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் தனது அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக தனது ஆயுளை கழிக்கின்றான். இத்தகைய மனிதன் சில அடைவுகளை குறிக்கோளாக கொண்டு தனது வாழ்கைப் பாதையை, அந்த இலக்குகளை நோக்கியதாக நகர்த்திச் செல்கின்றான். இவ்வாறு எதிர் நீச்சல் போடும் மனித வாழ்வில் சில சமயங்களில் முன்னேற்றங்களும் சில சந்தர்ப்பங்களில் தடங்கள்களும் ஏற்படுவது என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கையின் நியதிகளில் ஒன்றாகும்.

நாம் அனைவரும் நம் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பல இழப்புகளிற்கும் பல இன்னல்களிற்கும், பல துக்ககரமான நிகழ்வுகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இத்தகு சூழ்நிலைகளின் போது சர்வ சக்தனான அல்லாஹ்வின் மீதுள்ள பற்றுறுதியும், திடமான நம்பிக்கையும் எமக்கு ஆறுதல் அளிப்பதாகவும், பொறுமை கொள்ளச் செய்வதாகவும் அமைந்து விடுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

எவ்வாறாயினும் மனிதன் என்ற ரீதியில் இவ்வாறான சில கடினமான சந்தர்ப்பங்களில் மனிதன் இயல்பாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி துவண்டு விழுந்து விடுகின்றான் என்பதே உண்மை.




மன உளைச்சலை எடுத்துக் கொண்டால் உலகில் வாழும் மனிதர்களில் ஏறத்தாள 40 சதவீதமானவர்கள் தமது வாழ்வில்  ஏதாவதொரு கட்டத்தில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மன உளைச்சலானது ஒப்பீட்டளவில் பெண்களையே அதிகம் பாதிப்பதாகவும் ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் இருபத்தியோராம் நூற்றாண்டின் முதலிரு தசாப்தங்களுக்குள் இந்த உலகை ஆட்கொள்ளும் ஒரு கொடிய கொள்ளை நோயிருப்பின் அது இந்த ‘டிப்ரஸன்’ எனும் மன உளைச்சலுடன் தொடர்பான நோயாகவே இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

டிப்ரஸன் என்பது ஒரு மனிதனுடைய நாளாந்த வாழ்வை மிகவும் தீவிரமாக பாதிக்கத்தக்க, பல பின்னடைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு கொடிய நோயாக கருதப் படுகிறது. மேலும் இது மனிதனின் மனதை, சிந்தையை, அறிவு ஆற்றல்களை மழுங்கடிக்கச் செய்து அவனை ஒரு நடைப்பிணமாக்கும் ஆற்றல் கொண்டது.

நீங்கள் உங்கள் வாழ்வில் சலிப்படைந்துவிட்டால், அல்லது தனிமையை நாடி ஓர் இடத்தை தேடிச் செல்வதாக இருந்தால், அல்லது நீங்கள் எப்போதும் பயத்துடனும், மன அழுத்தத்துடனும், வாழ்வை அர்த்தமற்றதாக எண்ணி நம்பிக்கையற்ற நிலையிலும், நிதானமற்று, தூக்கமற்று, இருள் மயமான, மனச் சோர்வு நிறைந்த, மகிழ்ச்சியற்ற ஒரு வாழ்வை வாழ்வதாக இருந்தால் அனேகமாக நீங்களும் ஒரு மன உளைச்சளிற்கு ஆளான நபர் என கருதப்படலாம்.
 
இந்த நோயின் விளைவாக ஒருவர் தனது சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கஷ்டங்களையும் இயலாமையையும் உணரலாம். மேலும் தனது வாழ்வில் உதவி ஒத்தாசைகளை இழந்து, தான் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் உணரலாம்.

இத்தகு நிலைக்கு இட்டுச் செல்லத்தக்கதாக பின்வரும் உதாரணங்களை எடுத்துக் கொள்ளலாம்; எதிர்பாராத விதமான மரணங்கள், கைநழுவிச் சென்ற சந்தர்ப்பங்கள், பொருளாதார ரீதியிலான இழப்புக்கள், விடாப் பிடியாக பின் தொடரும் ஒழுக்க சீர்கேடான, சீரழிந்த கெட்ட பண்புகள், எதிர்பாராத (பரீட்சை பெறுபேறு) அதிருப்தியளிக்கத்தக்க அனுபவங்கள், நீண்ட கால நோய்கள், தேவையற்ற எதிர்மறையான (negative thoughts) சிந்தனைகள் போன்றன காரணிகளாக அமைந்து விடுகின்றன. மேலும் இவை ஏதாவதொரு உருவத்தில் மனிதனுள் பொறாமை, பயம், கோழைத்தனம், தோல்வி மனப்பான்மை, மற்றும் பாதுகாப்பின்மை போன்ற சிந்தனைக் கோளாறுகளையும் மன பிரம்மையையும் ஏற்படுத்தி பிற மன நோய்கள் உருவாவதற்கு வழிவகைகளை செய்கின்றன.

இந்த மன உளைச்சல் அல்லது டிப்ரஸனின் உச்ச கட்டமாக ஒருவரை இது தற்கொலை வரை உந்தித் தள்ளக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சிலர் தமக்குத் தாமே தீயிட்டுக் கொள்வதுமுண்டு.

இன்றளவில் நாம் எடுத்து நோக்கும் போது, இந்நோயானது, சமூகத்தில் எல்லா மட்டங்களையும் சேர்ந்த மக்களையும் தட்டுத் தடையின்றி ஆட்கொள்ளக் கூடிய கவலைக்கிடமான நிலையொன்றே காணப்படுகின்றது. மேலும் இதனால் ஆட்பட்ட மனிதன் தனது இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பல வெறுப்பூட்டத்தக்க, அருவருப்பான மற்றும் கொடூரமான பல பாதகச் செயல்களை செய்வதற்கு முன்வருகின்றான்.

இங்கு எனது நோக்கம் மன உளைச்சலிற்கான காரணங்களையும் விளைவுகளையும் உட்குடைந்து ஆராய்வதல்ல. மாறாக இந்நோய் நிலை குறித்தான வித்தியாசமான ஒரு கண்ணோட்டத்தை முன்வைப்பதாகும்.

இங்கு நாம் எடுத்துக் கொள்ளப் போவது இஸ்லாத்தின் பார்வையில் நாம் எவ்வாறு இப்பிரச்சினையைக் கையாழ்வது?? நித்தியமான, நிதர்சனமான மார்க்கம் கூறும் தீர்வு என்ன?? போன்ற கேள்விகளை பகுப்பாய்வு செய்வதாகவே அமைந்திருக்கும், மேலும் ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் ஒருவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொள்வானேயானால் “மனத் தளர்ச்சி” எனும் சொல் அவனது வாழ்வெனும் அகராதியில் இருக்கவே முடியாது என்பதை நிரூபிற்பதாயும் அமைந்திருக்கும்.

லேமான்(layman)ந்நிபந்தனைகளின் அடிப்படையில் மனஉளைச்சல் இரண்டு விதமான வடிவங்களாக கருதப்படும். அவற்றில் ஒன்று மனித மூளையில் நிகழும் இரசாயன மாற்றங்களின் விளைவாக ஏற்படும். மற்றையது சந்தர்ப்ப சூழ்நிலைகளின் விளைவாக உருவாவதாகவும் கருதப்படுகின்றது.

 ஒரு மனநல மருத்துவர் (psychiatrist) மூலமாக முதலாவது கூறிய இரசாயன மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பிரச்சினைகளை சீர் செய்யவும், ஒரு உளநல வள்ளுனர் (psychologist) மூலமாக இரண்டாவது கூறப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளுடன் தொடர்புடைய நோயாளிகளையும் கவனிக்க முடியும்.


ஒரு சமூகவியல் கண்ணோட்டத்தில் எடுத்து நோக்கும்போது, ஒரு முஸ்லிம் ஒரு போதும் இந்த நோயினால் பாதிக்கப்படவே முடியாது என்பது சந்தேகமற தெளிவாகக் கூற முடியும். ஏனெனில் ஒரு முஸ்லிமுடைய மனதை அலங்கரித்து, ஆட்சி செய்யும் அவனது மார்க்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், அவனது வாழ்வில் வரும் ஏற்றத்தாழ்வுகள் யாவும் சோதனையே என்பதை உணர்த்துவதாகவே அமையும்.

எத்துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி கொண்டே தவிர (எவரையும்) பீடிப்பதில்லை; ஆகவே, எவர் அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ அவருடைய இதயத்திற்கு (அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதை பொருந்திக் கொண்டு, பொறுமையுடனிருக்க) அவன் வழிகாட்டுகிறான்; அன்றியும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நங்கறிகிறவன்”.            
(அத்தகாபுன்- 11)

எனவே, ஒரு முஸ்லிமுக்கு வரும் கஷ்டங்களும், துயரங்களும், தோல்விகளும், இன்னோரன்ன பல இன்னல்களும் எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் சோதனைகளே தவிர வேறில்லை. மேலும் அனேகமான சந்தர்ப்பங்களில் மனித வாழ்வில் வரும் அவலங்கள் யாவும் நீடித்து நிலைப்பதில்லை (இவ்வாறே செல்வச் செழிப்பும்). இவை யாவும் கடல் மேற்பரப்பில் தள்ளாடும் சருகுகளைப் போல, சில சமயம் அலை மேற்கொண்டு வரப்படுவதனால் அகங்கொண்டு வீராப்பாய் தெரியும். மறு கணம்சுருட்டியடிக்கப்பட்டு கடலுக்குள் காணாமல் மறைந்துவிடும். ஏனெனில், ஒவ்வொரு எழுச்சியின் பிற்பாடும் விரைவாகவோ சற்று காலம் தாமதித்தோ வீழ்ச்சிகள் தோன்றும்.


ஆகவே, நிச்சயமாகக் கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது. நிச்சயமாக கஷ்டத்துடன் இலேசு இருக்கிறது”.         
(அஷ்ஷரஹ்- 5,6)

சிலருக்கு கடலானது மிகவும் கொந்தளிப்பானதாக இருக்கும், எனவே, இவர்களிற்கு அலைகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இவர்களின் வாழ்வை பந்தாடச் செய்துவிடும். இன்னும் சிலருக்கோ கடலானது அமைதியாக தோற்றமளிக்கும். அவர்கள் முன் தோன்றும் அலைகளினது எழுச்சியும் வீழ்ச்சியும் புறக்கணிக்கத்தக்கதாக காணப்படும்.

எத்தகையதொரு இக்கட்டான சூழலாக இருப்பினும் ஓர் உண்மை முஸ்லிம் அவனது உறுதியான இறை நம்பிக்கையின் விளைவாக, தனக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை விருப்புடனும், பொறுமையுடனும் சகித்துக் கொண்டு தனக்காக மறுமையில் வாக்களிக்கப்பட்ட என்றுமே வற்றாத அருட்செல்வங்களை ஆதரவுவைப்பான்.

“(விசுவாசங்கொண்டோரே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிக(ளின் விளைச்சல்க)ள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம்; மேலும், (நபியே! இவற்றைப்) பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!”                               
(அல்பகரா- 155)

எனவே, இந்த சடத்துவ சித்தாந்தத்தைக் கொண்ட உலகில் ஓர் உண்மை முஸ்லிமுக்கு அல்லாஹ்வின் மீதான உறுதியான இறை நம்பிக்கையும் சுபீட்சமிக்க மறுமை வாழ்வின் மீதான பற்றும் நம்பிக்கையும் மிகப் பெரும் சொத்தாக அமைந்து விடுகிறது. அவனது உறுதியான நம்பிக்கையின் விளைவாக எந்தவிதமான உளைச்சல்களிற்கோ, கவலைகளிற்கோ ஆளாவதில்லை.

(அபூயஹ்யா என்ற) ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) அறிவிக்கின்றார்கள்:
ஒரு முஃமினின் காரியம் ஆச்சரியமானதே! அவனது காரியம் அனைத்தும் அவனுக்கு நல்லதாக அமைகிறது. ஒரு முஃமினைத் தவிர வேறு எவருக்கும் இது நிகழ்வதில்லை.

v  அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் நன்றி கூறுகிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகிறது.
v   
v  அவனுக்கு தீயவை ஏற்பட்டு விட்டால், பொறுமையாக இருக்கிறான். அது அவனுக்கு நல்லதாகி விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.            (முஸ்லிம்- 2999)

2) அல்லாஹ்வின் மீதே தவிர மற்றையவர்கள் மீது ஆதரவு வையாமை
                                                                                                                                                                                                                                       (தொடரும்)....

No comments:

Post a Comment