அஷ்ஷெய்க் இஸாம் ஃபஹ்ருதீன் (நளீமி)
(Facebook பயன்படுத்தும்
ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவும்)
السلام عليكم ورحمة الله وبركاته
எமது ஆக்கத்தின் முதலாம்
பகுதியில் Facebook கை அடிப்படையாகக் கெண்டு
விமர்சனத்தில் தடுக்கப்பட வேண்டிய
இரண்டு பண்புகளை அலசினோம். (அதை வாசிக்காதவர்கள் இந்த Link கை click பன்னவும் விமர்சனம் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - பகுதி 1 தொடர்ந்தும் சிறியதொரு
முன்னுரையுடன் இன்னும் சில பண்புகளைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.
முன்னுரை
மனித நலம் பேணுதல்
என்பது இஸ்லாத்திற்கே உரிய ஒரு சிறப்பியல்பாகும். இஸ்லாத்தின் அனைத்து சட்டதிட்டங்களையும் அலசிப் பார்த்தால் இந்தச் சிறப்புப் பண்புக்கு இஸ்லாம் எந்தளவு
பெறுமானம் வழங்கியுள்ளது என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இஸ்லாம்
மனிதனுக்கு நலனை ஏற்ப்படுத்தும் விடயங்களை ஆகுமாக்கி மனித நலனுக்கு பாதகம் விளைவிக்கும்
அனைத்து விடயங்களையும் ஹராமாக்கியுள்ளது. இவ்வாறு இஸ்லாம் ஹராமாக்கிய விடயங்களை இரண்டாக
பிரித்து நோக்கலாம். முதலாவது உணவு, உடை, வீடு போன்ற வெளிப்படையான
செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்டவை, இரண்டாவது امراض القلوب என அழைக்கப்படும் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்டவை. இந்தப் பிரிவை வல்ல நாயன்
அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்.
ما ظهر என்ற சொல் வெளிப்படையான
செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட பாவங்களையும், و ما بطن ب என்ற சொல் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்ட பாவங்களையும் குறித்துக் காட்டுகின்றது. மேலும் ஒரு வசனத்திலும்
இப்பிரிவை அல்லாஹ் விளக்குகின்றான்.
