Friday, August 15, 2014

விமர்சனம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.




அஷ்ஷெய்க் இஸாம் ஃபஹ்ருதீன் (நளீமி)

(Facebook  பாவிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவும்)

இன்றைக்கு இஸ்லாம் என்பது ஒரு மதமாக உலக மக்களிடையே முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் எந்த மதத்திற்கும், இயக்கத்திற்கும், அமைப்பிற்கும் இல்லாதொரு பண்பாட்டுக் கொள்கை இஸ்லாத்திடம்
இருக்கின்றது. அத்தகைய பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் தான் பிற மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த வேறுபாடு ஒன்றே இன்றைக்கு இஸ்லாத்துடன் மற்ற கொள்கை மக்களைப் பிணைக்கின்ற காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய சமுதாயத்தில் பண்பாடு பரவலாக புறக்கணிக்கப்படுகிறது அகீதா, இபாதா, முஆமலாத் போன்ற விடயங்களில் எவ்வாறு அல்-குர்ஆனும், சுன்னாவும் இட்ட வரையறைகளை ஒரு சொட்டேனும் மீறிவிடக்கூடாது எனப்புரிந்துள்ள சமுதாயம் பண்பாட்டு விடயத்தில் குர்ஆன் சுன்னாவுக்கு நேர்எதிராக இருப்பது கவலைகுரிய விடயமே… வரலாற்றில் என்றுமே காணப்படாத அளவு இன்று விமர்சனம் வளர்ச்சியடைந்து, பண்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.எனவேதான் விமர்சனத்தை ஒரு பேசுபொருளாக்கியுள்ளோம். விமர்சனங்களின்போது எவ்வாறு எவ்வாறெல்லாம் பண்பாடு மீறப்படுகின்றது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.




அதிகமாக விமர்சனத்தின் இடமாகவும், அதன் வளர்ச்சித்தளமாகவும் முகநூல் மாறியுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. முகநூலில் சிலரது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பார்க்கும் போது இபாதத்தில் மாத்திரமா குர்ஆன் ஹதீஸ் பின்பற்றப்படவேண்டும் ???? எனக்கேட்கத்தோன்றுகிறது. ஆரம்பமாக இஸ்லாம் ஒரு பூரணமான வாழ்க்கைத் திட்டம். வாழ்க்கையில் அனைத்துப்பகுதியிலும் குர்ஆன் ஹதீஸ் பின்பற்றப்படவேண்டும் என்ற கருத்தை சுருக்கமாக அலசிவிட்டு விமர்சனம்ää இஸ்லாம்ääநடைமுறை மூன்றையும் இணைத்து நோக்கலாம் என நினைக்கின்றேன்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
(2:208)

இஸ்லாம் ஒரு ப10ரணமான வாழ்க்கைத் திட்டம். வாழ்க்கையில் அனைத்துப்பகுதியிலும் குர்ஆன் ஹதீஸ் பின்பற்றப்படவேண்டும் என்ற கருத்தை இந்த வசணம் பறைசாற்றுகின்றது. “இஸ்லாத்தில் ப10ரணமாக நுழைந்துவிடுங்கள்” என முதல் அரைப் பகுதியும் “சைத்தானின் பாதச்சுவடுகளை பின்பற்றவேண்டாம்”; என இரண்டாம் அரைப்பகுதியும் சுட்டிகாட்டுகின்றது. எனவே இஸ்லாதில் ஒரு பகுதியை எடுத்து  மறுபகுதியை விடுபவன் சைத்தானின் பாதச்சுவடுகளை பின்பற்றுபவன். எனவே இபாதத்திலும் நம்பிக்கை கோட்பாடுகளிலும் எவ்வாறு இது குர்ஆன் ஹதீஸில் இருக்கின்றதா? இல்லையா? என ஆராயப்படுகின்றதோ அதேபோல் பண்பாடு, பொருளாதார மற்றும் வாழ்வாதார விடயங்களிலும் ஆராயப்படவேண்டும். வேலியே பயிர்களை மேய்வதைபோல் சில உலமாகளே பண்பாட்டை இழந்து சமூகத்துக்கு மோசமான முன்உதாரணமாக திகழ்வதும் அவர்களை ஒரு பாமரக்கூட்டம் பின்பற்றுவதும் வேதனைக்குறிய விடயமே.. எனவே குர்ஆன் ஹதீஸ் இபாதத்தில் மாத்திரம் அல்ல அனைத்து விடயத்திலும் பின்பற்றபட்டால்தான் இறைக்கட்டளைப்படி ப10ரணமாக இஸ்லாதில் நுழைந்தவர்களாக இருப்போம். வெற்றியாளர்கள் யார் என்பதை அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான்

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ (1) الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ (2) وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ (3)  (23:1-3)

“ ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால்இ தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும்இ அவர்கள் வீணான (பேச்சுஇ செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.”

வெற்றியாளர்களை பற்றி பேசும் அல்லாஹ் அவர்களின் பண்புகளை குறிப்பிடுகின்றான்.முதலாவது பண்பாக தொழுகையில் பயபக்தி எனும் இபாதத்தையும் இரண்டாவதாக வீணான பேச்சு மற்றும் செயற்பாடு போன்றவற்றை விட்டுவிடுதல் என்ற பண்பாட்டையும் குறிப்பிடுகின்றான். எனவே இபாதத்தில் மாத்திரம் ஏற்படும் சீர்திருத்தத்தினால் மறுமையில் வெற்றியாளர்களாய் மாறமுடியாது மாற்றமாக பண்பாட்டிலும் சீர்திருத்தம் வேண்டும்.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் இஸ்லாத்தில் ஒரு பகுதியை எடுத்து மறுபகுதியை விடுபவது தவிர்கப்பபடவேண்டும் என்பது தெளிவு. இப்பொழுது நேரடியாக எமது தலைப்புக்குள் நுழையலாம்.நேரடியாக விமர்சனம் செய்யும் காலம் மலையேரி இணையதளத்தினுடாக குறிப்பாக குயஉநடிழழம ஊடாக விமர்சனம் செய்யும் காலத்தில்; வாழ்கிறோம். இவ்வாறான விமர்சனங்களில் எவ்வாறு நம்மை அறியாமலே இஸ்லாத்துக்கு முரனாக செயற்படுகின்றோம் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.


திட்டுதல்

தனக்குப் பிடிக்கவில்லை அல்லது தனது கருத்துடன் உடன்படவில்லை என்பதெற்காக வேண்டி உலமாக்களையும், மாற்று கருத்துடையவர்களையும், இயக்கங்களையும், இன்னோரன்ன நபர்களையும் சாராமாரியாக திட்டுகின்ற ஒரு பாமரக்குழு உருவாகியுள்ளது அல்லது வழிநடத்தப்படுகின்றது. இவர்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கொடுக்க என  சில உலமாக்கள் வேறு….

திட்டுதல் என்பது மார்கத்தில் கடுமையாக எச்சரிக்கப்பட்ட விடயம்.
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا
4:148.
அநியாயம் செய்யப்பட்டவர்களைத் தவிர (வேறு யாரும்) வார்த்தைகளில் தீயவற்றை பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்பவில்லை - அல்லாஹ் நன்கு செவியுறுவோனாகவும் யாவற்றையும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

மேலும் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை திட்டுவது பெரும் பாவமாகும் என ஹதீஸ் குறிப்பிடுகின்றது.
سباب المسلم فسوق وقتاله كفر  புகாரி – 48

நபிகள் நாயகம் ஒரு விடயத்தை பெரும் பாவம் எனச் சொல்லியிருக்க அதில் எந்த ஒரு கரிசனையுமின்றி சர்வசாதாரணமாக அதே செயலை செய்கின்றவனை என்னவென்று சொல்ல…

திட்டுதல் என்றுவரும் போது சில விடயத்தை விளங்கியே ஆகவேண்டும். விமர்சனம் என்ற பெயரில் ஒரு முஸ்லிம் இன்னெரு முஸ்லிமை திட்டுவதெற்கு பிரதான காரணம் கருத்தை விமர்சித்தல் என்ற பண்பு நீங்கி கருத்துக்குரிய நபரை விமர்சிக்கும் பண்பு அதிகரித்திருப்பதாகும்.தனது கருத்தை ஆதாரப10ர்வமாகவோ, தர்கரீதியாகவோ நிறுவ முடியாது எனக் காணும்போது கருத்தை விட்டு விட்டு நபரை நோக்கி விஷம் கக்கும் நாகங்கள் பல.. சிலர் ஒரு படி மேலே சென்று நபர், அவருடைய மனைவி,  குழந்தைகுட்டி, சொந்தபந்தம் என அனைவரையும் நடுதெருவிக்கு இழுத்து மானத்தை போக்கும் நடவடிக்கையை கனகச்சிதமாக அரங்கேற்றுகின்றார்கள். நாங்களும் குர்ஆன்ääஹதீஸை பின்பற்றுகின்றவர்கள் தான் என்று அடிக்கடி மார்பை வேறு தட்டிக்கொள்வார்கள்….

அன்பார்ந்த இஸ்லாமிய சகோதரர்களே  உண்மையில் நான் இறைவேதத்தையும்ääநபிபோதனைகளையும் தானா பின்பற்றுகின்றேன்??? ப10ரணமாக நான் இஸ்லாதில் நுழைந்துவிட்டேனா??? மார்க்கத்தில் பெரும் பாவம் எனக் கூறப்பட்ட விடயத்தை விட்டும் நான் ஒதுங்கியுள்ளேனா??? என்று ஒவ்வொருவரும் தன் உள்ளத்தை கேட்டுக்கொள்ளவேண்டும்.

கற்பனை

கற்பனையை அரபியில் الظن என்று கூறுவார்கள்.எமது சமுதாயத்தில் எவ்வாறு விமர்சனங்களில் கற்பனை கோட்டைகள் கட்டப்படுகின்றது என்பதை பார்ப்பதெற்கு முன்னால் அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்பனை சம்பந்தமாக என்ன கூறியிருக்கின்றார்கள் என ஆராய்வோம்.

وَمَا يَتَّبِعُ أَكْثَرُهُمْ إِلَّا ظَنًّا إِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا إِنَّ اللَّهَ عَلِيمٌ بِمَا يَفْعَلُونَ        (10:36)

“ஆனால்இ அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.”

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَنْ يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَحِيمٌ            (49:12)

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும்இ உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்இ உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும்இ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.

இந்த வசனங்களில் அல்லாஹ் கற்பனை என்பது எந்தவிதமான உண்மையையும் குறிக்காது என்பதையும் கற்பனையின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பதையும் தெளிவாக கூறுகின்றான். இவை தவிர்ந்த இன்னும் பல வசனங்களும் கற்பனை பற்றி பேசுகின்றன. பல இடங்களில் நபிகளாரும் கற்பனையில் பேசுவதைääசெயற்படுவதைää முடிவுகள் எடுப்பதை எச்சரித்துள்ளார்கள்.

إياكم الظن فإن الظن أكذب الحديث......" ”    புகாரி – 6066

“(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை எச்சரிக்கிறேன்.ஏனெனில் சந்தேகம் கௌ;வது பெரும் பொய்யாகும்.”
எனவே கற்பனை என்பது உண்மையை குறிக்காது என்பதை தெளிவாக புரிந்துகௌ;ளலாம்.
இன்றைய விமர்சனங்களிலும்و கருத்துக்களிலும்و பதிவுகளிலும்و

இவற்றை எல்லாம் பார்க்கும் போது இபாதத்தில் மாத்திரமா குர்ஆன் ஹதீஸ்???? எனக்கேட்கத்தோன்றுகிறது. எனவே நபிகளார் செய்யக்கூடாது என எச்சரித்த கற்பனை கோட்டைகளையும் அதிலே குடியிருக்கும் பாமர குடியிருப்புக்களையும் உடனே கலைக்க வேண்டும்.
உண்மைக்குப் புரம்பான பல கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. இவற்றிக்கு காட்டப்படும் ஒரே ஒரு ஆதாரம் இந்த கற்பனைதான். சமூகத்தில் ஒரு சில விஷமிகளால் அரங்கேற்றப்படும் அட்டூழியங்கள் சில தனிநபர்களின் தலையில் கட்டப்படுகின்றன.திடீரென உணர்சிவசத்தால் நடந்த சில சம்பவங்கள் எந்தவிதமான ஆதாரமும் இன்றி வெறும் சில சந்தேகங்களின் அடிப்படையில் நீண்டகால திட்டமிடலாக சித்தரிக்கப்படுகின்றது.ப10னையை பானையாகவும் பானையை யானையாகவும் சித்தரிக்கும் சித்தாந்தம் வெற்றிகரமாக நகர்த்தப்படுகின்றது.

தொடரும்…….

No comments:

Post a Comment