Thursday, August 28, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி-2


doctor isni


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

(இக்கட்டுரையின் முதலாம் பகுதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம் திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி 1



ஒரு முறை நபித்தோழர்களில் ஒருவருக்கு மிகுந்த கடுமையான வறுமை நிலை ஏற்பட்டது. அவரது மனைவி நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரிடம் உதவி கேட்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் உதவி பெறும் நோக்கில் நபி (ஸல்)அவர்களின் அவையில் சென்று உட்கார்ந்து கொண்டார். மேலும் நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை எப்போது தன்மீது விழும் என்ற அவாவுடன் நபியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை அத்தோழர் மீது விழுந்தது, அவரும் தனது நிலைமையை எடுத்தியம்ப தக்க தருணம் இதுதான் என எண்ணி தனது பிரச்சினையை கூற வாய் திறக்க முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறலானார்:

ஒரு நபர் என்னிடம் தனது தேவைகளின் நிமித்தம் உதவி பெற வருகிறார் என்றால் நிச்சயமாக நாம் அதை அவருக்கு நிறைவேற்றிக் கொடுப்போம், ஆனால் அவர் தன்னிலையை வெளிப்படுத்தாது இறை நியதியை பொருந்திக் கொள்வாரேயானால் தன்னிறைவுமிக்க வசதியான வாழ்வை அல்லாஹ் அவருக்கு வழங்குவான் எனக் கூறினார்.

Monday, August 25, 2014

விமர்சனம் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - பகுதி 2




அஷ்ஷெய்க் இஸாம் ஃபஹ்ருதீன் (நளீமி)

(Facebook பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவும்)
السلام عليكم ورحمة الله وبركاته

எமது ஆக்கத்தின் முதலாம் பகுதியில்  Facebook கை அடிப்படையாகக் கெண்டு விமர்சனத்தில் தடுக்கப்பட வேண்டிய இரண்டு பண்புகளை அலசினோம். (அதை வாசிக்காதவர்கள் இந்த Link கை click பன்னவும் விமர்சனம் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - பகுதி 1  தொடர்ந்தும் சிறியதொரு முன்னுரையுடன் இன்னும் சில பண்புகளைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

முன்னுரை

மனித நலம் பேணுதல் என்பது இஸ்லாத்திற்கே உரிய ஒரு சிறப்பியல்பாகும். இஸ்லாத்தின்  அனைத்து சட்டதிட்டங்களையும் அலசிப் பார்த்தால் இந்தச் சிறப்புப் பண்புக்கு இஸ்லாம் எந்தளவு பெறுமானம் வழங்கியுள்ளது என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இஸ்லாம் மனிதனுக்கு நலனை ஏற்ப்படுத்தும் விடயங்களை ஆகுமாக்கி மனித நலனுக்கு பாதகம் விளைவிக்கும் அனைத்து விடயங்களையும் ஹராமாக்கியுள்ளது. இவ்வாறு இஸ்லாம் ஹராமாக்கிய விடயங்களை இரண்டாக பிரித்து நோக்கலாம். முதலாவது உணவு, உடை, வீடு போன்ற வெளிப்படையான செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்டவை, இரண்டாவது امراض القلوب  என அழைக்கப்படும் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்டவை. இந்தப் பிரிவை வல்ல நாயன் அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான். 






ما ظهر என்ற சொல் வெளிப்படையான செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட பாவங்களையும், و ما بطن ب என்ற சொல் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்ட பாவங்களையும்  குறித்துக் காட்டுகின்றது. மேலும் ஒரு வசனத்திலும் இப்பிரிவை அல்லாஹ் விளக்குகின்றான். 

Monday, August 18, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்)




doctor isni

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

(இத்தகுதிக்குரியோர்) எத்தகையோரென்றால், அவர்கள் (மெய்யாகவே) விசுவாசங்கொண்டார்கள்; இன்னும், அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவுகூர்வதால்  இதயங்கள் நிச்சயமாக அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீராக                               (அர்ரஃது 28)

அறிமுகம்
ஒரு மனிதன், அவன் பிறந்தது முதற்கொண்டு இறக்கும் வரையில் தனது அன்றாட வாழ்வில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாக தனது ஆயுளை கழிக்கின்றான். இத்தகைய மனிதன் சில அடைவுகளை குறிக்கோளாக கொண்டு தனது வாழ்கைப் பாதையை, அந்த இலக்குகளை நோக்கியதாக நகர்த்திச் செல்கின்றான். இவ்வாறு எதிர் நீச்சல் போடும் மனித வாழ்வில் சில சமயங்களில் முன்னேற்றங்களும் சில சந்தர்ப்பங்களில் தடங்கள்களும் ஏற்படுவது என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இயற்கையின் நியதிகளில் ஒன்றாகும்.

நாம் அனைவரும் நம் வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பல இழப்புகளிற்கும் பல இன்னல்களிற்கும், பல துக்ககரமான நிகழ்வுகளிற்கும் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் நாம் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இத்தகு சூழ்நிலைகளின் போது சர்வ சக்தனான அல்லாஹ்வின் மீதுள்ள பற்றுறுதியும், திடமான நம்பிக்கையும் எமக்கு ஆறுதல் அளிப்பதாகவும், பொறுமை கொள்ளச் செய்வதாகவும் அமைந்து விடுகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

எவ்வாறாயினும் மனிதன் என்ற ரீதியில் இவ்வாறான சில கடினமான சந்தர்ப்பங்களில் மனிதன் இயல்பாகவே மன உளைச்சலுக்கு ஆளாகி துவண்டு விழுந்து விடுகின்றான் என்பதே உண்மை.

Saturday, August 16, 2014

சுய விமர்சனமே எனது தஃவாவின் அடிநாதம்! -முஹம்மத் அல் கஸ்ஸாலி-



கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சிந்தனையின் மொத்த வடிவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தஃவாவை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவரே மர்ஹூம் அல் கஸ்ஸாலி அவர்கள். மூன்று தசாப்தங்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஊறித்திழைத்து பெரும் அறிவு வளர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கொண்டிருந்த அவரது மரணம் இஸ்லாமிய உம்மத்துக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு எனத் துணிந்து கூறலாம். தனது எண்பது வயதிலும் இஸ்லாமிய சிந்தனை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருபத்தைந்து வயது வாலிபத்தின் இளமையை எம்மால் தரிசிக்க முடிகின்றது. இப்பெரும் அறிவுஜீவியின் அனுபவங்கள், புரட்சிகரமான கருத்துக்கள் ஏனைய எல்லோரையும் விட அவரை தனித்துவமானவராக அடையாளப்படுத்தி இருக்கின்றன.

குற்றுயிராய்க் கிடக்கும் இஸ்லாமிய உம்மத்தை தூக்கி நிறுத்தி இஸ்லாமிய ஜீவிதத்தை அதன் நரம்பு நாளங்களில் பாய்ச்சுவதற்கான முதன்மையான ஆயுதம் சுயவிமர்சனமே என்று அவர்கள் கருதி வந்தார்கள். இங்கு இஸ்லாமிய தஃவா குறித்து அவருடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், இன்றைக்கு தஃவா களத்தில் இருப்பவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் தருகின்றோம்.

(இவர் எழுதிய, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது. இப் புத்தகத்தின் ஒரு பகுதியே இவ்வாக்கம்)

Friday, August 15, 2014

விமர்சனம் ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்.




அஷ்ஷெய்க் இஸாம் ஃபஹ்ருதீன் (நளீமி)

(Facebook  பாவிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவும்)

இன்றைக்கு இஸ்லாம் என்பது ஒரு மதமாக உலக மக்களிடையே முன்னிறுத்தப்படுகின்றது. ஆனால் எந்த மதத்திற்கும், இயக்கத்திற்கும், அமைப்பிற்கும் இல்லாதொரு பண்பாட்டுக் கொள்கை இஸ்லாத்திடம்
இருக்கின்றது. அத்தகைய பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் தான் பிற மதத்தைப் பின்பற்றுபவர்களிடமிருந்து முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டுகின்றது. இந்த வேறுபாடு ஒன்றே இன்றைக்கு இஸ்லாத்துடன் மற்ற கொள்கை மக்களைப் பிணைக்கின்ற காரணியாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்றைய சமுதாயத்தில் பண்பாடு பரவலாக புறக்கணிக்கப்படுகிறது அகீதா, இபாதா, முஆமலாத் போன்ற விடயங்களில் எவ்வாறு அல்-குர்ஆனும், சுன்னாவும் இட்ட வரையறைகளை ஒரு சொட்டேனும் மீறிவிடக்கூடாது எனப்புரிந்துள்ள சமுதாயம் பண்பாட்டு விடயத்தில் குர்ஆன் சுன்னாவுக்கு நேர்எதிராக இருப்பது கவலைகுரிய விடயமே… வரலாற்றில் என்றுமே காணப்படாத அளவு இன்று விமர்சனம் வளர்ச்சியடைந்து, பண்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது.எனவேதான் விமர்சனத்தை ஒரு பேசுபொருளாக்கியுள்ளோம். விமர்சனங்களின்போது எவ்வாறு எவ்வாறெல்லாம் பண்பாடு மீறப்படுகின்றது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

Friday, August 8, 2014

இஸ்லாமியப் பொருளாதாரம் என்றால் என்ன? - அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்


தட்டுங்கள் திறக்கப்படும்!



அஷ்ஷெய்க் இஸாம் பஹ்ருதீன் (esPkp)

எனது கடன் எப்போது தீரும்?
இந்த நோய் தீராதா?
மகளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பதில்லையே?
பிள்ளை நன்றாக படிப்பதில்லையே?

இவை அனைத்தும் மனிதர்கள் அன்றாடம் முனங்கும் வார்த்தைகள்தான். இவை எப்போதும் சமூகத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வினாக்கள் மனிதனின் தேவைகளின் சிலவைதான். இந்தத் தேவைகளை அடைந்து கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் மகத்தான, பலமான இலகுவான வழிமுறைதான் பிரார்த்தனை (துஆ) ஆகும்.