Thursday, August 28, 2014

திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி-2


doctor isni


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

(இக்கட்டுரையின் முதலாம் பகுதியை இந்த இணைப்பில் வாசிக்கலாம் திருமறையின் கண்ணோட்டத்தில் டிப்ரஸன் (மன உளைச்சல்) பகுதி 1



ஒரு முறை நபித்தோழர்களில் ஒருவருக்கு மிகுந்த கடுமையான வறுமை நிலை ஏற்பட்டது. அவரது மனைவி நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவரிடம் உதவி கேட்குமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் உதவி பெறும் நோக்கில் நபி (ஸல்)அவர்களின் அவையில் சென்று உட்கார்ந்து கொண்டார். மேலும் நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை எப்போது தன்மீது விழும் என்ற அவாவுடன் நபியவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்களின் திருப்பார்வை அத்தோழர் மீது விழுந்தது, அவரும் தனது நிலைமையை எடுத்தியம்ப தக்க தருணம் இதுதான் என எண்ணி தனது பிரச்சினையை கூற வாய் திறக்க முற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறலானார்:

ஒரு நபர் என்னிடம் தனது தேவைகளின் நிமித்தம் உதவி பெற வருகிறார் என்றால் நிச்சயமாக நாம் அதை அவருக்கு நிறைவேற்றிக் கொடுப்போம், ஆனால் அவர் தன்னிலையை வெளிப்படுத்தாது இறை நியதியை பொருந்திக் கொள்வாரேயானால் தன்னிறைவுமிக்க வசதியான வாழ்வை அல்லாஹ் அவருக்கு வழங்குவான் எனக் கூறினார்.



இதைக் கேட்டதும்,  அத்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் தனது தேவையைக் கூற மனமில்லாமல் ஒரு வார்த்தை கூட பேசாது, வீட்டுக்கு திரும்பிச் சென்று அவரது மனைவியிடம் நடந்த சம்பவத்தை விளக்கினார். இதனைக் கேட்டதும் அவரது மனைவி “நபி (ஸல்) அவர்களும் ஒரு மனிதர்தானே,  உங்களது தேவைகளை அவரிடம் எடுத்துக் கூறுங்கள். அதன் பின் அவர் என்ன கூறுகிறார் என்பதைப் பாருங்கள்” என அந்நபித்தோழரை தேற்றி மீண்டுமொரு முறை நபியவர்களிடம் செல்லத் தூண்டினார்.

அந்நபித்தோழரும் இரண்டாவது முறையாக நபி (ஸல்) அவர்களின் அவைக்குச் சென்றார். ஆனால் மீண்டும் நபியவர்களிடமிருந்து அதே வார்தைகளை செவிமடுத்த அத்தோழர் மீண்டும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். மூன்றாவது முறையும் இதே சம்பவம் நிகழ, மனிதர் ஒரு முடிவு எடுத்தவராக தனது நண்பர் ஒருவரிடம் இருந்து ஒரு கோடாரியை இரவலாகப் பெற்றுக் கொண்டு அங்கிருந்ததோர் மலையை நோக்கி நடக்கலானார்.

அன்று நாள் முழுவதும் அவர் கடினமாக வேலை செய்து, தான் வெட்டிய விறகுகளை சேகரித்துக் கொண்டு சந்தைக்கு சென்றார். அங்கே தனது விறகுகளை விற்று ஒரு சில சில்லறைகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர் தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு சிறிதளவு கோதுமை மாவினை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். அன்று இரவு அவரும் அவரது மனைவியும் ரொட்டிகளை சமைத்துண்டனர்.

(இந்த இடத்தில் தலைப்புக்கு பொருந்தாதபோதும், இவர்களது வாழ்க்கைப் பிண்ணனியை அடிப்படையாகக் கொண்டு சில விடயங்களை கூறிக் கொள்வது சிறந்தது என நான் நினைக்கிறேன், அதாவது ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் உண்ணும் உணவுகளில் சிறந்தது எது என வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒருவர் தன் கரத்தால் உழைத்து உண்ணும் உணவை விட சிறந்த உணவை யாரும் உண்ண மாட்டார் என பதிலளித்தார்....... பாக்கியம் பெற்றவர்!!! மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் தன் மனைவிற்கு ஊட்டும் (அதாவது தன் கரங்களால் உணவை எடுத்து தன் மனைவியின் வாயில் வைப்பது எனவும் கொள்ளப்படும்) ஒவ்வொரு கவழ உணவும் ஸதகாவாகும் எனக் கூறியுள்ளார்கள்...... பாக்கியங்களைப் பெற்றவர் இவரன்றோ!!!!......)

அடுத்த நாள், அவர் மேலும் கடினமாக வேலை செய்து விறகுகளை சேகரித்துக் கொண்டு சந்தைக்குச் சென்றார்...... இவ்வாராக பல நாட்கள் தொடர்ந்தது. முதலில் அவர் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஒரு கோடாரியை வாங்கிக் கொண்டார். பின்னர் அவரது கடின உழைப்பின் விளைவாக சில காலம் கழித்து. அவரால் இரண்டு ஒட்டகங்கள் மற்றும் ஓர் அடிமையை வாங்க முடிந்தது. மேலும் அக்காலத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராகவும் மாறினார்.

அதன் பின்னர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களின் முன் வந்து, நபி (ஸல்)அவர்களது வார்த்தைகளின் விளைவினால் அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளையும் மாற்றங்களையும் விவரித்தார். நபி(ஸல்) அவர்கள், நான் முன் கூறியது போல: “யார் ஒருவர் பிறர் தயவின்றி சுயமாக வாழ முற்படுகிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு பெற்ற சுயாதீனமானவர்களாக மாற்றுகிறான் "என்றார்கள். 

படிப்பினை: எனதருமை நண்பர்களே! நிச்சயமாக கஷ்டங்களின்போது நாம் அல்லாஹ்வின் அருள் குறித்து நம்பிக்கை இழந்து விடக் கூடாது. மேலும், எந்த ஒரு ஜீவனையும் அதன் சக்திக்கு மீறியதாக எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு படைப்பாளனாகிய அல்லா் நிர்ப்பந்திப்பதில்லை என்பது அருள் வாக்காகும்.

புனித குர்ஆன் கூறுகிறது: “எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்குட்பட்டதைத் தவிர நாம் கஷ்டப்படுத்துவதில்லை.“ (6:152)

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்விடமே என் காரியங்களை ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் ( என அந்த நல்லடியார் கூறினார்) அவரை அல்லாஹ் அவர்களின் தீங்குகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டான். (40:44,45)

ஒரு கிழட்டுக் கழுதை சொல்லித் தந்த பாடம்... 

ஒரு நாள் ஒரு விவசாயியின் கிழட்டுக் கழுதையொன்று தனது தோட்டத்தில் இருந்த பாழடைந்த கிணறொன்றில் விழுந்து விட்டது. விழுந்த கழுதை பல மணத்தியாலங்களாக கத்திக் கொண்டே இருந்தது. விவசாயியிற்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. பின்னர் பாழடைந்த கிணற்றை எப்படியும் மூடி விட வேண்டும். மேலும், தன்னிடம் இருப்பதுவோ ஒரு கிழட்டுக் கழுதை. இதனை காப்பாற்றுவதில் தனக்கு எதுவித இலாபமும் இல்லை என எண்ணியவராக கிணற்றை மூடிவிட தீர்மானித்து விட்டார். 

எனவே, ஒத்தாசைக்கு தனது அண்டை அயலவர்களை அழைத்துக் கொண்டு தனது பாழடைந்த கிணற்றை மூட ஆரம்பித்தார். ஒவ்வொரு மண்ணை அள்ளி கிணற்றில் போட ஆரம்பித்தனர். முதலில், கழுதை என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கடுமையாக கத்தத் தொடங்கியது. சில மணி நேரத்தின் பின்னர், அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய வண்ணம், தனது கதரலை அடக்கிக் கொண்டது. ஓரளவு கிணற்றில் மண் நிரம்பியதன் பின்னர், விவசாயி கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது ஒவ்வொரு முறையயும் கழுதையின் மீது மண்ணை வாரிக் கொட்டும்போது அது அதன் மீது விழும் மண்ணைத் உதரித் தட்டிவிட்டு அதன் மீதே நின்று கொள்ளும். இவ்வாறாக, ஒவ்வொரு முறையும் அதன் மீது மண் வாரி இறைக்கப்படும்போதும், அதனைத் தட்டி விட்டு அதன் மீதே ஏறிக் கொள்ளும். இவ்வாறாக இறுதியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய வண்ணம், கழுதை கிணற்றின் விளிம்பை அடைந்தது.

படிப்பினை
அருமை நண்பர்களே! வாழ்ககை எப்போதும் எம்மீது மண்ணை வாரிக இறைப்பதுபோல் பிரச்சினைகளை அள்ளி வீசிக் கொண்டேதான் இருக்கும். ஆனால் ஒரு சாமர்த்தியசாளி தன்னை நோக்கி வரும் அத்தனை தடைக் கற்களையும் படிக்கற்களாக மாற்றி தன் வாழ்வில் ஜெயம் பெறுவான். ஆகவே, இத்தகையதொரு ஆழமான கிணற்றிலிருந்து மீள இந்தக் கழுதை எமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன?

விடா முயற்சி
தன்னம்பிக்கை

தன் மீது கொட்டப்படும் மட்டி, மடையன், முட்டாள், வெட்டி, சோம்பேறி, ஏமாளி, கோமாளி போன்ற குப்பைகளையெல்லாம் சவாலாகக் கொண்டு தன் காலால் மித்தெழுந்து காட்ட வேண்டும் என்பனவற்றையல்லவா? எனவே, ஒருபோதும் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். உங்களது முழு நம்பிக்கையையும், படைத்துப் பரிபாலித்து ஒவ்வொன்றிற்கும் அதனதன் ஒழுக்குகளை அமைத்துக் கொடுக்கும் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ்வின் மீதே வையுங்கள். ஓர் உண்மை முஸ்லிம் ஒருபோதும் இறைவனின் மீது நம்பிக்கையிழக்க மாட்டான். ஏனெனில், அது ஒரு பாவ காரியமாகும்.

தொடரும்...

3 comments:

  1. Good good... innum pudhiya wishayangala edhir parkinrom... my best wishes

    ReplyDelete
  2. page setups is wrong.. unable to read...

    ReplyDelete