Tuesday, October 28, 2014

பிறந்த உடனே பேசும் அற்புதக் குழந்தைகள்


முஹம்மத் இசாம் (நளீமி)

அறிவியல் வேகமாக வர்ச்சியடைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீண்ட கால முயற்ச்சி, ஆழமான ஆய்வு, கடுமையான உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானம் கண்டிடுத்த எத்தனையோ அறிவியல் உண்மைகளையும், கோட்பாடுகளையும் அல்குர்ஆன் ஓரிண்டு வங்களில் அழகாகவும், தெளிவாகவும் கூறியிருப்பதைப் பார்த்து எத்தனையோ பேர் நிச்சயமாக இது இறை வேதம்தான் எனக் கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

புனித அல்குர்ஆனில் பிழை கண்டுபிடிக்க வேண்டும் என முனைபவர்கள், அதிகமாக சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்தான் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு. எந்த ஒரு ஆணும் தீண்டாமல் ஒரு குழந்தை பிறப்பது என்பதும், பிறந்த குழந்தை உடனே பேசியது என்பதும் அறிவியலுக்கு முற்று முழுதாக மாற்றமானது,  எனவே இஸ்லாம் இறை வேதம் அல்ல என்பதுவே இவர்களது வாதம். இவர்களது வாதம் சரிதானா?  என்பதை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தை உருவாக்கத்துக்கு ஆண்கள் கட்டாயம் என்ற காலம் மலையேறி, ஒரு பெண் மாத்திரமே போதும் என்ற காலத்திலேயே நாம் தற்போது வாழ்கிறோம். அதாவது, ஒரு மனிதனின் உயிரணு அல்லது மரபணுவை எடுத்து ஒரு பெண்ணின் கருவறையில் வைத்து வளர்ப்பதன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என்று நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வழிமுறைதான் குளோனிங்என வழங்கப்படுகின்றது. 1970 களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறை, ஆரம்பமாக தவரங்களில் பயன்படுத்தப்பட்டு பாரிய வெற்றியையும் கண்டது.

Thursday, October 23, 2014

ரணிலுக்கு வெல்ல முடியுமா???



சுனன்த தேஷப்ரிய
தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெறலாம் என்ற பேச்சு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவே முன்னிறுத்தப்படுவார். எவ்வளவுதான் சட்ட ரீதியான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் பலத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்தப்படப்போவது மஹிந்த ராஜபக்ஷதான்.

எதுவித ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இடம் வைக்காமலேயே ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க உள்ளார். அடக்குமுறைதான் அவரின் அரசியல் மூலோபாயம். வடக்கில் தமிழ் மக்களை வெல்வதற்காக, அங்கு உலா வரும் அதேவேளை, வடக்கையும் கிழக்கையும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளுக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆக்கியுள்ளார் ராஜபக்ஷ.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதற்கேற்ப, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் வடக்குக்கும் கிழக்குக்கும்; செல்ல முடியாது. இதன் சமூக பொருளாதா விளைவுகள் யாழ் தேவி ரயிலை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்ததையும் விட பாரதூரமானதாகும். இது ராஜபக்ஷவின் தேர்தல் திட்டத்தில் சேதம் உண்டாக்கும் என்பது திண்ணம். என்றாலும், அவரின் அடக்குமுறை அரசியல் மூலோபாயம் தேர்தல் திட்டத்தை விடவும் உயரத்திலேயே இருக்கின்றது.

Friday, October 17, 2014

அக்ல் நக்ல் பார்வையில் பிக்ஹ்



முஹம்மத் இசாம் (நளீமி)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

இஸ்லாமிய மார்க்கம் ஒரு பரிபூரண வாழ்க்கை வழிகாட்டி. இந்தப் பரிபூரணத் தன்மையை மனிதன் பரிபூரணமாக விளங்கி அதன் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வேண்டி அறிஞர்கள் இஸ்லாத்தை பல கலைகளாக கூறுபோட்டு ஆராய்கின்றனர். ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர்,தஜ்வீத், மனாஹிஜுல் முஹத்திஸீன், மகாஸிதுஷ் ஷரீஆ, முகாரனதுல் அத்யான்……  என இஸ்லாமிய கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறான கலைகளில் அதிகமாக  மனித வாழ்க்கையுடன் பிண்ணிப்பினைந்த ஒன்றுதான் பிக்ஹ் ஆகும். இந்த சட்டக்கலைப் பற்றிய பரிபூரணமான ஒரு பார்வை இல்லை என்றாலோ அல்லது அதற்கே உரிய அணுகுமுறையில் அதை அணுகவில்லை என்றாலோ அதன் தாக்கமானது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதனால் அதைப் பற்றிய ஒரு தெளிவை வழங்குவதெற்கான ஒரு சிறு முயற்சியே இந்த ஆக்கம். இந்த ஆக்கத்தில் பிக்ஹ் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம், சில கிளைவிடயங்களில் முடிவான ஒரு முடிவை கூறமுடியாது என்பது பற்றிய விளக்கம் அதற்கான ஆதாரங்கள், நடைமுறையில் நாம் எதிர் நோக்கும் சில சட்டப்பிரச்சினைகளின் ஊடாக கருத்து முரன்பாட்டுக்கான சில நியாயங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமது கடமை என்ன என்பது பற்றியதொரு தெளிவு என்பன இன்ஷா அல்லாஹ் அலசப்படும்.

Monday, October 13, 2014

பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு



மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி  

தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா

கேள்வி:
நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா?

பதில்:
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!
மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க் ஹஸனுல்பன்னா(ரஹ்) அவர்கள் தனது ரஸாயில்களில் இதனைக் குறிப்பிட்டார். அதிகமான மக்கள் இது ஹஸனுல் பன்னா(ரஹ்) அவர்களது கருத்து எனக் கருதும் அளவுக்கு அவர் பெயரில் இக்கூற்று பிரபல்யமடைந்துவிட்டது.

மேற்படி கூற்றின் முதற்பகுதி நமக்குள் உடன்பாடான விடயங்களில் ஒருவருக் கொருவர் உதவியாக இருப்போம் என்பதாகும். இது முஸ்லிம்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடில்லாத ஏகோபித்த அடிப்படையில் உள்ள நல்ல விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகின்றது.

Friday, October 10, 2014

கலாநிதி முஹம்மத் இமாரா – அறிமுகக் குறிப்பு

கலாநிதி முஹம்மத் இமாரா

சுலைஹா மைந்தன்

சமகால இஸ்லாமிய சிந்தனைக்கும் அறிவுத் துறைக்கும் மிகுந்த பங்களிப்பு செய்தவர்களுள் கலாநிதி முஹம்மத் இமாரா முதன்மையானவர். இவரது 140 க்கும் மேற்பட்ட புத்தகங்களும் ஆய்வுகளும் நவீன கால இஸ்லாமிய சிந்தனைத் தளத்தில் புதிய பல தலைப்புக்களையும் விவகாரங்களையும் ஆய்வு செய்துள்ளன. இந்தப் புத்தகங்களையும் ஆய்வுகளையும் ஒருசேரப் பார்க்கும்போது ஒரு தனிமனிதனால் இவ்வளவு ஆய்வுகளைச் செய்ய முடியுமான என பிரமிக்கும் அளவுக்கு அவை செறிவானவை.

1931 இல் எகிப்தின் கஃபருஷ் ஷெய்க் பகுதியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த கலாநிதி இமாரா, தான் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது, தனது குழந்தை ஆணாகப் பிறந்தால் அதை அறிவுக்காக அர்ப்பணிப்பதாக தனது தந்தை நினைத்திருந்ததாக ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். கலாநிதி இமாரா சிறு வயதிலேயே அல்குர்ஆனை மனனமிட்டு தஜ்வீத் கலையிலும் சிறந்து விளங்கினார். பின்னர், தாருல் உலூமில் இஸ்லாமியத் துறையில் கலாநிதிப் பட்டம் வரை கல்வியைத் தொடர்ந்தார்.

சமகால உலகில் இஸ்லாத்தை நடுநிலைமையாக முன்வைக்கும் சிந்தனையாளர் வரிசையில் இடம்பிடிக்கும் கலாநிதி இமாரா எகிப்து அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மன்றம், இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருக்கின்றார்.

Thursday, October 9, 2014

'இரும்பு' என்ற பெயரில் ஒரு ஸூறாவையே பெற்றிருக்கின்ற சமூகம் இரும்புக் கைத்தொழிலைக் கற்றுக் கொள்ளவில்லையே!


கலாநிதி யூஸுப் அல்கர்ளாவி
தமிழில்: சுலைஹா மைந்தன்

சிலர் இஸ்லாமிய எழுச்சி தொழினுட்பத்துக்கு முரணானது, அது தொழினுட்பம் குறித்து அஞ்சுகின்றது, அது விஞ்ஞானம் குறித்து பயப்படுகின்றது என்றவாறு கருதுகின்றனர். இது பிழையான கருத்தாகும். இஸ்லாத்தின் அழைப்பாளர்களாகிய நாம் இஸ்லாமிய எழுச்சியைப் பலப்படுத்தவும் அதனை வழிப்படுத்தவுமே முயற்சிக்கின்றோம். நாம் விஞ்ஞானத்தை  வரவேற்கின்றோம். அதன்பால் மக்களை அழைக்கின்றோம்.

அறிவியல் முன்னேற்றத்தின் அனைத்துத் துறைகளினதும் கடிவாளத்தை கையில் எடுக்காதவரை எமது நாடுகளின் இருப்பை உறுதிப்படுத்த முடியாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இதனை ஒரு பர்ழாகவும் கருதுகிறோம்.

முஸ்லிம்களுக்கு தமது உலக விவகாரங்களுக்கு அவசியமான மருத்துவம், பொறியியல், இரசாயனவியல், கணிதம் ஆகியவை பர்ழ் கிபாயா என்று உலமாக்கள் சொல்லியுள்ளார்கள். அதாவது, இஸ்லாமிய சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவு அறிஞர்களும் நிபுணர்களும் இருந்தால் முஸ்லிம் சமூகம் பர்ழ் கிபாயாவிலிருந்து நீங்கி விடும். அப்படியில்லாது, அனைத்துத் துறைகளிலும் போதுமானளவு நிபுணர்கள் இல்லாது போனால் முழு முஸ்லிம் சமூகமும் தவறிழைத்ததாகக் கொள்ளப்படும்.

Sunday, October 5, 2014

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவது எப்படி?


அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி)

அல்லாஹுத் தஆலா முஃமின்களாகிய எமக்கு இரண்டு பெருநாட்களைத் தந்துள்ளான். ஒன்று ஈதுல் அழ்ஹா. அடுத்தது ஈதுல் பித்ர். இவ்விரு பெருநாட்களையும் முக்கியமான இரண்டு வணக்கங்களைத் தொடர்ந்துதான் அல்லாஹ் எமக்குத் தந்திருக்கிறான்.

ரமழானுடைய நோன்பைத் தொடர்ந்து ஈதுல் பித்ர் பெருநாளையும் ஹஜ் கடமையை அடுத்து ஈதுல் அழ்ஹா எனும் தியாகத்திருநாளையும் நாம் கொண்டாடுகிறோம். மாத்திரமல்ல, ஈகைத்திருநாளைக் கூட தக்பீரோடு ஆரம்பிக்கிறNhம். தக்பீரோடு நிறைவு செய்கிறNhம். இடையிலே மீண்டும் தொழுகையிலும் மற்றும் பல வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறோம்.

பெருநாள் தினத்தை மறுமையோடு ஒப்பிட முடியும். மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை அல்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகிறது.

“சில முகங்கள் அந்நாளிலே மகிழ்ச்சியாக இருக்கும் (சிரித்துக் கொண்டிருக்கும்). அந்நாளில் மற்றும் சில முகங்கள் புழுதி படிந்த நிலையில் இருக்கும். முகங்களிலே இருள் சூழ்ந்திருக்கும்.”

Wednesday, October 1, 2014

கணவர்களுக்கு மட்டும்!


ஸஹர் கஸ்ஸைமாஹ்

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்


வீட்டை சுத்தமாக்கி விட்டாயா?
இரவுச் சாப்பாடு தயாரா?
குழந்தைகளுக்கு உணவு+ட்டி விட்டாயா?
எனது ஆடைகளைக் கழுவி விட்டாயா?

மனைவியை மனைவியாக நோக்காது, தனது பணிப் பெண்ணாகவும், குழந்தைகளைப் பெறும் இயந்திரமாகவும் நோக்கும் கணவர்களிடமிருந்து, பெண்கள் இரவு பகலாக செவிமடுக்கும் கேள்விகள்தான் இவை.

பெண்களும் ஆண்களும் மிகுந்த வேலைப்பளுவுக்கு மத்தியிலேயே வாழ்கின்றனர். ஆனால், சில கணவர்கள் திருமணத்தில் பொதிந்துள்ள உண்மையான விடயங்களையும், தமது மனைவிமாரின் உரிமைகளையும் மதிக்காது நடக்கின்றமை மிகுந்த கவலைக்குரியதாகும்.

இவர்கள் வெற்றிகரமான குடும்பமொன்றின் அஸ்திவாரமான குழந்தைகளின் சந்தோசம், சகாக்ககள் ஆகியவற்றைப் பிடுங்கிக் கொள்கின்றனர். இவ்வாறான சமநிலையற்ற நிலைமை தொடர்கின்றபோது, குடும்பம் பிரச்சினைகளுக்குள்ளும் கவலைகளுக்குள்ளும் சிக்கிக் கொள்கின்றது.

மார்க்க பக்தியுள்ள குடும்பங்களில் கூட, தமது மனைவியரை சரியாகப் புரிந்து கொள்ளாத, திருமணம் முடித்த ஒரு ஜோடிக்கு இடையிலான உறவைப் புரிந்து கொள்ளாத கணவர்களைக் காணலாம்.

Sunday, September 28, 2014

வளர்ந்து வரும் தேர்தல் இலஞ்சம்!


(2014.09.14 ஆம் திகதிய ராவய பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

தமிழில்: அஷ்கர் தஸ்லீம்

ஊவா மாகாண சபைத் தேர்தல் இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான தேர்தலாக அடையாளப்படுத்தப்படுவதற்கான அடையாளங்கள் தெளிவாகத் தெரிகின்றன. ஒரு புறம் அதிகளவில் மீறப்படும் தேர்தல் விதிமுறைகள்; இன்னொரு புறம் ஆளும் கட்சி தனது பலத்தை முறையற்ற வகையில் பயன்படுத்வதும் அரச உடைமைகளை தனது நலனுக்காக பயன்படுத்துவதும்.

அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் உள்ளமை வெளிப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனாலும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதன் மூலமும், அந்தத் தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் கைக்கொள்ளும் மோசமான வழிமுறைகள் மூலமும் நாட்டின் ஜனநாயகம் பாதாளத்துக்குச் சென்றுள்ளத்தை ஜனாதிபதி தெரிவிக்காமை ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனெனில், அவர்தான் அந்த வழிமுறையின் ஸ்தாபகர்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கம், தமக்கு சார்பாக உள்ள சந்தர்ப்பங்களில், தேர்தல்களை நடத்துவது இலங்கைக்கு புதியதொரு விடயம் அல்லாதபோதும், இவ்வாறு வருடம் முழுதும், நினைத்த நினைத்தவாறு தேர்தல்களை நடத்தும் வெட்கத்துக்குரிய வழிமுறை ஸ்தாபிக்கப்பட்டது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தின் மூலமே. இந்த ஒவ்வொரு தேர்தலும், தேர்தல் எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கான சிறந்த உதாரணங்களுமாகும்.

Thursday, September 25, 2014

மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளைப் பராமரித்தல்



முஹம்மத் இஸாம் (நளீமி)

மாற்றுத்திறனாளி என்பவர் உடலிலோ, மனதிலோ ஏற்பட்ட சில மற்றங்களின் காரணமாக சில காரியங்களை அவர்களால் செய்ய முடியாது உள்ளவர்களாகும். WHO இன் அறிக்கைப்படி உலக சனத்தொகையில் 15% ஆனவர்கள் மாற்றுத் திறனாளிகளாகும். WORLD BANK இன் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 5% ஆனவர்கள் மாற்றுத் திறனாளிகளாகும் அதில் 20% ஆனவர்கள் ஏழைகளாகும். இலங்கை எனத் தனியாகப் பார்க்கும் போது UNESCAP என்ற நிறுவனத்தின் 2003 ம் ஆண்டு கணிப்பீட்டின்படி 7% என்ற அளவில் மாற்றுத்திறனாளிகள் காணப்படுகின்றனர். GoSLCensus என்ற நிறுவனத்தின் ஆய்வுப்படி 2001 ம் ஆண்டு இலங்கையில் மொத்தம் 274711 பேர் மாற்றுத்திறனாளிகளாகக் காணப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளை பின்வருமாறு வகைப்ப்டுத்துகின்றனர்.
1 மரபனுவினால் பிறப்பிலேயே ஏற்படும் மாற்றங்கள்.
2 தாயின் கருவில் இருக்கும் போது அல்லது பிறப்பின் போது ஏற்படும்    நோய்களால் ஏற்படும் மாற்றங்கள்
3 நோயினாலோ, விபத்தினாலோ ஏற்படும் மாற்றங்கள்
4 இதுவரை கண்டு பிடிக்காத காரணங்களினால் ஏற்படும் மாற்றங்கள்

Sunday, September 21, 2014

ஜனாதிபதித் தேர்தல்: ஜே.வி.பி தனது பாத்திரத்தைப் புரிந்து கொள்ளுமா?


அஷ்கர் தஸ்லீம்


2015 ஆம் ஆண்டின் முதற் கூறுகளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு நீண்ட நாட்களாகவே அடிபட்டு வருகின்றது. நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் அதன் ஒத்திகையாகவே பலராலும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வின் ஜெனீவா மனித உரிமை விசாரணையின் விளைவாக சிலவேளை இலங்கைக்கு எதிரான தடைகள் விதிக்கப்படலாம். அதற்கு முன்னரே பிரதான இரு தேர்தல்களையும் நடத்தி முடித்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஒரு புறம், இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற, மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் பெறுபேறுகளைப் பார்க்கும்போது, அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதை அவதானிக்கலாம்.

இன்னொரு புறம், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க மீதான நம்பிக்கை கூடியதைக் காணவும் முடியவில்லை. ஐ.தே.க வின் இடத்தை நிரம்பும் நிலைக்கு ஜே.வி.பி யும், பொன்சேகாவின் ஜனநயாகக் கட்சியும் முன்னேறியதனையே அவதானிக்க முடிந்தது.

Thursday, September 18, 2014

குழந்தைப் பாக்கியம்

இஸ்லாமிய மற்றும் மருத்துவ ரீதியான ஒரு வழிகாட்டுதல்
முஹம்மத் இசாம் (நளீமி)



அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்ல நாயன் அல்லாஹ் மனிதனுக்கு கோடான கோடி  அருட்கொடைகளை வாரிவழங்கி இருக்கின்றான். அவன் ஜீவிக்கும் பூமியாக இருக்கலாம், அவனை பாதுகாக்கும் வானமாக இருக்கலாம், செப்பனிடப்பட்ட சூழலாக இருக்கலாம், பார்க்கின்ற கண்ணாக இருக்கலாம், பேசுகின்ற வாயாக இருக்கலாம், பிடிக்கின்ற கையாக இருக்கலாம், நடக்கின்ற காலாக இருக்கலாம், ஏன் சிந்திக்கின்ற மூளையாக இருக்கலாம் அனைத்துமே அவன் கருணையின் வெளிப்பாடே…! இவ்வாறு இறைவனின் அருட்கொடைகளில் மிகப் பிரதானமான ஒன்றுதான் குழந்தைப் பாக்கியம். இதைப்பற்றி இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.

Monday, September 15, 2014

தேசிய ஷூறா சபையின் ​உழ்ஹிய்யா வழிகாட்டல் -2014


ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் உழ்ஹிய்யா கொடுப்பது தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய சில அறிவுறுத்தல்கள்!

1. உழ்ஹிய்யா என்பது அதனை நிறைவேற்ற வசதியுள்ளவர்கள் செய்யும் ஓர் உயர்வான சுன்னா முஅக்கதா (வலியுறுத்தப்பட்ட சுன்னத்) ஆகும். இதனை நாட்டின் சட்ட-விதிமுறைகளுக்கமையசமூக நால்லிணக்கத்தைக் கருத்திற்கொண்டு இலங்கை முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டும்.

2.எமது நாட்டைப் பொறுத்தவரை ஆடுமாடு ஆகியவற்றை உழ்ஹிய்யாவுக்காகப் பயன்படுத்த முடியும். இவை ஆண் விலங்குகளாகவும், மாடு இரண்டு வயது பூர்த்தியானதாகவும், ஆடு ஒருவயது பூர்த்தியானதாகவும் இருத்தல் வேண்டும். முடியுமானவரை உழ்ஹிய்யாவுக்கு ஆடுகளைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும். 

Saturday, September 13, 2014

மீண்டும் ஒரு அலுத்கம வேண்டாம்





பல்லின மக்கள் வாழக்கூடிய இலங்கை நாட்டிலே நாம் மக்கள் பலத்தால் மூன்றாம் இனமாகவும் சிறுபான்மை என்ற அடிப்படையில் இரண்டாம் இனமாகவும் வாழ்ந்து வருகின்றோம். குறிப்பிட்ட சில இடங்களில் சுருங்கிவிடாமல் நாடு பூராகவும் பரந்து விரிந்து வாழ்வதே எமது பிரத்தியோகமான சிறப்பம்சம். இந்தச் சிறப்பம்சம் சில நேரங்களில் எமது பலவீனமாக அமைந்துவிடுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய கிராமம், முஸ்லிம் சமூகம் என்று பார்க்கின்ற போது முதலில் கண்முன் தோன்றுவது கிழக்கு மாகாணம் தான். வாளைசேனை, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, மருதமுனை, சம்மாந்துரை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, நிந்தவூர் எனப் பல முஸ்லிம் குடியிருப்புக்கள் அங்கே காணப்படுவதை நாம் நன்றாகவே அறிந்துவைத்துள்ளோம். அக்குரனை, பேருவலை, திஹாரி என்பன கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க சனத்தொகை கொண்ட முஸ்லிம் கிராமங்களாகும். இவை தவிர நாடு பூராகவும் சிறிய சனத்தொகை கொண்ட பல முஸ்லிம் கிராமங்களும் குடியிருப்புக்களும் பரவிக்கிடப்பது கண்கூடு.

Sunday, September 7, 2014

சமூக மாற்றத்திற்கு ஒரு களம் அமைப்போம்




அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமத்தை கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
கட்டம்-01
அனைத்து புகழும், சர்வமும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்விற்கே சொந்தமாகும். புகழ்பாடிப் போற்றவும் புகல் தேடி கை நீட்டவும் தகுதியானவனே! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ மாபெரும் கிருபையாளன், தயாளமானவன், உன்னை நோக்கி நீட்டப்படும் கைகளை, வெறுங் கைகளாக திருப்பி அனுப்ப வெட்கப்படுபவன் ஆகவே யா அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்தருள்வாயாக!. மேலும் எங்கள் எண்ணங்களினாலும், செயற்பாடுகளினாலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தீங்குகளை விட்டும் எம்மை பாதுகாப்பாயாக!. யா அல்லாஹ் நீ எவரை நேர்வழியில் செலுத்தினாயோ அவரை எவராலும் வழிகெடுக்கவோ அல்லது நீ, யாரையெல்லாம் வழிகேட்டில் தட்டழியும்படி விட்டு விட்டாயோ அவர்களை நேர்வழிப்படுத்துவோ எவராலும் முடியவே முடியாது. மேலும் நீ மட்டுமே வணக்கத்திற்குரியவன். உன்னைத் தவிர எந்தப் படைப்பிற்கும் வணக்கத்திலே எந்தவிதப் பங்கும் இல்லை,
மேலும் முஹம்மது (ஸல்) அவனுடைய அடியாரும் திருத் தூதரும் ஆவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபியவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், அன்னாரின் தோழர்கள் மீதும், இறுதி நாள்வரை அன்னாரின் அடியொற்றி வாழும் ஆன்மாக்களின் மீதும் என்றென்றும் உண்டாவதாக!!!

Thursday, September 4, 2014


அஷ்கர் தஸ்லீம்

உலக அரசியல் நெருக்கடிகளின் பின்னால் பல காரணிகள் தொழிற்படுகின்றன. அவ்வாறே பிராந்திய அரசியல் நெருக்கடி மற்றும் பதட்டங்களின் பின்னணியிலும் பல்வேறு உள்ளாந்த காரணிகள் தொழிற்படுவதனை அவதானிக்கலாம். இப்பின்னணியில் தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் பிரதான காரணியாக மதத் தீவிரவாதத்தைக் குறிப்பிடலாம்.

தெற்காசியாவின் மிகப் பெரிய நாடும், உலகளவில் மிகப் பெரும் ஜனநாயக நாடுமான இந்தியாவில் உள்ள இந்துத்துவா மதத் தீவிரவாதம் குறித்த அறிமுகக் குறிப்பையே இங்கு தர முயல்கின்றேன்.

தெற்காசியாவில் மிகப் பெரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன ஆங்கிலேய ஆக்கிரமிப்புக்கு முன்னர் ஒரே நாடாகவே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கசப்புணர்வுகள், தப்பபிப்பிராயங்களின் விளைவாக இந்தியா பிளவுண்டது.

எனவே, முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டமைந்த வட மேல் மற்றும் கிழக்குப் பகுதிகள் பாகிஸ்தான் என்ற பெயரோடு தனி நாடாகப் பிரிந்து சென்றன. பின்னர், நிலத்தொடர்பற்றிருந்த பாகிஸ்தானின் மேற்குப் பகுதியும் கிழக்கும் பகுதியும் பிரிந்து கிழக்குப் பகுதி பங்களாதேஷ் என்ற நாடானது.

எம்மைப் பற்றி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்....... السلام عليكم ورحمة الله وبركاته நான் அக்குறணை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவன். எனது ஆரம்ப கல்வியை அக்குறணை பாலிகா மகா வித்தியாலயத்தில் கற்றேன். 

அதன் பின்னர், ஆறாம் வகுப்பு முதல் சாதாரண தரம் வரை அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கற்று, 2006 ஆம் ஆண்டு சாதாரணத்தரப் பரீட்சையில் சித்தியடைந்தேன் அல்-ஹம்துலில்லாஹ். மேற்ப்படிப்பை “அல்-ஜாமியா அந்-நளீமிய்யா அல்-இஸ்லாமிய்யா” வில் தொடர்வதற்கான வாய்ப்பை வல்ல நாயன் எனக்கு ஏற்படுத்தித் தந்தான். 

இங்கு ஷரீஆ கல்வியை ஆழமாகக் கற்றதோடு, உயர் தரப் பரீட்சை மற்றும் அல்-ஆலிம் பரீட்சையிலும் தோற்றி சித்தியடைந்தேன், அல்-ஹம்துலில்லாஹ். அடுத்த கட்டமாக பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக இணைந்து நுழைவுப் பரீட்சையான G.A.Q இல் சித்தியடைந்து தற்போது B.A பரீட்சையை எதிர்பார்த்து இருக்கின்றேன். 

2014.04.15 இல் வெற்றிகரமாக 7 வருட இஸ்லாமிய கற்கைநெறியை நிறைவுசெய்து ஒரு நளீமியாக சமூகத்தில் காலடி வைத்தேன். அல்-ஹம்துலில்லாஹ். கற்ற கல்வியை எவ்வாறாவது சமூகத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற அவாவின் வெளித்தோற்றம்தான் இந்த Shamsul Huda Research Foundation. எமது வெற்றிப்பாதைக்கு என்றும் உங்கள் துஆவை வேண்டியவனாய் உங்கள் சகோதரன், Ash- sheik Mohamed Isam (Naleemi)