Monday, August 25, 2014

விமர்சனம் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - பகுதி 2




அஷ்ஷெய்க் இஸாம் ஃபஹ்ருதீன் (நளீமி)

(Facebook பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்கவும்)
السلام عليكم ورحمة الله وبركاته

எமது ஆக்கத்தின் முதலாம் பகுதியில்  Facebook கை அடிப்படையாகக் கெண்டு விமர்சனத்தில் தடுக்கப்பட வேண்டிய இரண்டு பண்புகளை அலசினோம். (அதை வாசிக்காதவர்கள் இந்த Link கை click பன்னவும் விமர்சனம் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம் - பகுதி 1  தொடர்ந்தும் சிறியதொரு முன்னுரையுடன் இன்னும் சில பண்புகளைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

முன்னுரை

மனித நலம் பேணுதல் என்பது இஸ்லாத்திற்கே உரிய ஒரு சிறப்பியல்பாகும். இஸ்லாத்தின்  அனைத்து சட்டதிட்டங்களையும் அலசிப் பார்த்தால் இந்தச் சிறப்புப் பண்புக்கு இஸ்லாம் எந்தளவு பெறுமானம் வழங்கியுள்ளது என்பதை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் இஸ்லாம் மனிதனுக்கு நலனை ஏற்ப்படுத்தும் விடயங்களை ஆகுமாக்கி மனித நலனுக்கு பாதகம் விளைவிக்கும் அனைத்து விடயங்களையும் ஹராமாக்கியுள்ளது. இவ்வாறு இஸ்லாம் ஹராமாக்கிய விடயங்களை இரண்டாக பிரித்து நோக்கலாம். முதலாவது உணவு, உடை, வீடு போன்ற வெளிப்படையான செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்டவை, இரண்டாவது امراض القلوب  என அழைக்கப்படும் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்டவை. இந்தப் பிரிவை வல்ல நாயன் அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான். 






ما ظهر என்ற சொல் வெளிப்படையான செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட பாவங்களையும், و ما بطن ب என்ற சொல் உள ரீதியான பண்புகளின் சீர்கேடு சம்பந்தப்பட்ட பாவங்களையும்  குறித்துக் காட்டுகின்றது. மேலும் ஒரு வசனத்திலும் இப்பிரிவை அல்லாஹ் விளக்குகின்றான். 



எனவே இந்த வசனங்களின் அடிப்படையில் செயற்பாடுகளில் எவ்வாறு ஹராம் இருக்கின்றதோ அதே போல் பண்பாடுகளிலும் ஹராம் உண்டு என்பது தெளிவு. பண்பாட்டு ரீதியாக ஹராமான விடயங்கள் உள நோய்கள் என அழைக்கப்படும். இந்த உள நோய்கள் வெறுமனே உள்ளத்தோடு மாத்திரம் தங்கிவிடுவதில்லை. மாற்றமாக காலம் செல்லச் செல்ல இது ஒரு வெறியாக மாறி செயல் வடிவம் பெற ஆரம்பிக்கும்.  தப்பெண்ணமாகத் தொடங்கி குறைதேடுவதாக மாறி இதன் விளைவாக கோல், புறம், பொய், குத்திப்பேசுதல், குறை சொல்லுதல் எனப் பல படித்தரங்களை அடையும். ஆரம்பத்திலேயே இந்த நோய் இனம் கானப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையென்றால் அந்நபர்  சமூகத்திற்கு பாரியதொரு சவாலாக மாறுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறானவர்களின்  தீங்குகளில் இருந்து பாதுகாப்புத் தேடும் படி அல்லாஹ் எமக்குக் கட்டளையிடுகின்றான். 



இவ்வாறான உள நோய்களின் செயற்பாட்டு வடிவத்தின் ஒரு பரிமாணம்தான்  தகாத விமர;சனங்கள். ஒருவனது விமர்சனம்  சீர்கெட்டுவிடுவதற்கும், திசைமாறிச் செல்வதற்கும், கருத்தை விட்டு நபரை மோசமாக விமர்சிப்பதற்கும் பிரதான காரணம்  அவனது உள்ளத்தை மனநோய் ஆட்சி செய்வதாகும் என்பதனால் தான் இவ்விடத்தில் உள நோயை ஒரு பேசுபொருளாக்கினோம். 

தவிர்க்கப்பட வேண்டிய பண்புகள் 

மதீனாவில் நபிகளார; கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூகம் மிகவும்  முதிர;ச்சியடைந்த ஒரு சு+ழலில், இறுதியாக முஸ்லிம் சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் சொல்ல விரும்பிய செய்தியும் உள நோய்களோடு தொடர;புபட்டதாகும். இந்த வகையில் இறுதியாக இறங்கிய  ஸூராக்களில் ஒன்றான ஸூரதுல் ஹுஜராத்தின் 11,12 ம் ஆயத்துக்கள் எமக்கு இந்த உண்மையைப் புலப்படுத்துகின்றன.


முஃமின்களே! ஒருசமூகத்தார்பிறியதொருசமூகத்தாரைப்பரிகாசம்செய்யவேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன்.(49:11>12)


பரிகாசம் 

மேற்க்கூறிய வசனத்தில் ஆரம்பமாகத் தடைசெய்யப்பட்டுள்ள விடயம்  பரிகாசமாகும். எந்தவொரு மனிதனின் மனமும் புண்படும் வகையில் பரிகாசிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்றைய அதிகமான விமர்சனங்களில்  இந்த வரையறை பேணப்படுவதேயில்லை என்பது கவலைக்குரியதொரு விடயம். விமர்சனம் என்ற பெயரில்  ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை பரிகாசிப்பதற்கு பிரதாண காரணம்  கருத்தை விமர்சித்தல் என்ற பண்பு நீங்கி கருத்துக்குரிய நபரை விமர்சிக்கும் பண்பு அதிகரித்திருப்பதாகும். தனது கருத்தை ஆதாரபூர்வமாகவோ, தர்க ரீதியாகவோ நிறுவ முடியாது எனக் காணும்போது கருத்தை விட்டு விட்டு நபரை நோக்கி விஷம் கக்கும்  நாகங்கள் பல... ஏதோ சில உள நோய்கள், தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் சுய  இலாபம் போன்ற காரணிகளாலும், தான் விளங்கி வைத்திருக்கும்  இஸ்லாத்துக்கு முரண்படுகின்றாரே என்ற புரிதலாலும் மோசமான முறையில்  உலமாக்களை பரிகசிப்பதும், அவர;களை மிகவும் தாழ்ந்தவர்களாக சித்தரிக்க முயல்வதும்  இஸ்லாத்துக்கு முரணானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பரிகாசம் செய்யப்படுவதற்கு உலமாக்களும்  தூண்டு காரணியாக இருக்கின்றார்கள் என்பதை மறுக்கவே முடியாது. பொது மக்களின் தேவையை உணர்ந்து மார்க்கப் பிரச்சாரம் செய்வது உலமாக்களின் கடமை.  எரிகின்ற நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் சில உலமாக்களின்  செயற்பாடுகளே அமைவது வேதனைக்குரியதே. பொது மக்களின் தேவை ஆதாரங்களாக இருந்தால் அந்தத்  தேவையையும் உலமாக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். மேலோட்டமாக சட்டங்கள்  சொல்லப்படும் மரபு நீக்கப்பட்டு பொது மக்களின் தேவையை உணர;ந்து பேசப்படும்  ஓவ்வொரு சட்டமும் ஆழ அகலமாக பக்கச்சார்பு இன்றி விளக்கப்பட வேண்டும். பேசப்படும்  ஓவ்வொரு சட்டமும் எவ்வாறு குர்ஆன், ஸூன்னா ஒளியில்  பெறப்பட்டது என்ற தெளிவு பாமர மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 

இவ்வாறான தெளிவு வழங்கப்படும்போது உலமாக்கள் முழுமையாக குர்ஆன், ஸூன்னாவுக்கு முரண்படுகின்றார்கள் என்று சமூகத்தில்  ஆணிவேராக படர்ந்திருக்கும் எண்ணக்கரு நீக்கப்பட்டு பரிகாசம் என்ற ஹராதிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.  உலமாக்கள் தங்களை மாற்றிக் கொண்டாலும்  மாற்றிக் கொள்ளாவிட்டாலும் கருத்தைதான்  விமர்சிக்க வேண்டுமே தவிர நபரையல்ல என்பதை அடுத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

பழித்தல்,பட்டப்பெயர்

மேற்க்கூறிய வசனத்தில் இரண்டாவதாக தடை செய்யப்பட்டுள்ள விடயம் பழித்தலாகும்.  பழித்தல் என்பது நரகத்திற்கு இட்டுச்செல்லும் பாவங்களில் ஒன்றாகும். இதை அல்லாஹ்  பின்வருமாறு கூறுகின்றான்.

ويل لكل همزة لمزة
குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.(104:01)

ويل என்பதன் மொழிக் கருத்து கை சேதம், நாசம், கேடு என்பதாகும். அதே நேரம் நரகில் உள்ள ஒரு ஓடையின் பெயரும்ويل ஆகும். எனவே, பழித்துத் திரியும் ஒவ்வொருவரும் நரகில்  நுழைவார;கள் என்பது இதன் கருத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

வய்ல் எனும் நரக ஓடையில் அதன் அரைப் பகுதியை கடப்பதற்கு நிராகரிப்போர் 40 இலையுதிர் காலங்கள் தத்தளிப்பார்கள்….”

ஒரு முஸ்லிம் வெறுக்கக்கூடிய வகையான பெயர்களை சூட்டுவதும் அப்பெயரை வைத்து அழைப்பதும் பட்டப்பெயர் என அழைக்கப்படும். இன்று ஒரு சில உலமாக்களை தவிர பெரும்பாலான உலமாக்களுக்கு பட்டப்பெயர் சூட்டப்பட்டு அதனைனக் கொண்டு பரவலாக அழைக்கப்படுவதையும் சமூகவலை தளங்களினூடாக அவதானிக்க முடியும். மேற்க்கூறிய வசனத்தில் பட்டப்பெயர்  சூட்டுவதை தடுக்கும் அல்லாஹ், ஒரு முஃமின் அதை செய்வது மிக மோசமான செயல் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றான். எனவே, மறுமையை  இலக்காகக் கொண்ட முஸ்லிம்கள் இந்த மோசமான பண்பை கலைவதில் எந்தத் தயக்கமும் காட்டக்கூடாது. மாற்றமாக, மோசமான பண்புகளை கலையாமல், அல்லாஹ்விடத்தில்  மீளாமல் இருப்பவன்தான் அநியாயக்காரன் என அல்லாஹ் அந்த வசனத்தின் கடைசியில்  கூறுகின்றான்.

புறம்,கோல்,அவதூறு,

அடுத்ததாக Facebook இல் இடம்பெறும் ஒரு பாவச் செயல்தான் அடுத்தவன் துன்பத்தில் இன்பம் காணுதல். தனக்குப் பிடிக்கவில்லை அல்லது தனது கருத்துடன் உடன்படவில்லை என்பதற்காக வேண்டி அவனது அந்தரங்க விடயங்களை பகிரங்கப்படுத்துவதும், குறைகளையே நோண்டி நோண்டி  இருப்பதும், அவரைப் பற்றி மோசமான விடயங்களை பரிமாறி பரஸ்பரம் இன்பம் அடைவதும், பொது மக்களுக்கு மத்தியில்  அவரை கேவலமானவராக சித்தரிக்க முயல்வதும், சில போடோக்களை Edit பண்ணி அதை கேவலமாக விபரிப்பதும் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இவை அனைத்தையும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கடுமையாக கண்டித்துள்ளனர். குர்ஆன் ஹதீஸை பின்பற்றவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கின்ற பல முஸ்லிம்களின்  கண்ணிலோ கல்பிலோ இந்த ஹதீஸ்கள் படுவதேயில்லை என்பதுதான் ஆச்சரியதிலும் ஆச்சரியம். பிறர் நலதுடன்  சம்பந்தப்படாத குறைகளை, தவறுகளை, பிழைகளை பகிரங்கப்படுதுவது ஓரு முஸ்லிமின் பண்பு கிடையாது. புறம் பேசுவதை வர்ணித்ததைப் போல்  இழிவாக எந்த ஒரு பாவத்தையும் அல்லாஹ் வர்ணித்ததில்லை.

புறம் பேசுபவனின் மனப்பாங்கு இறந்த தனது சொந்த உறவின்  இறைச்சியை உண்ண விரும்புபவனின் மனப் பாங்கை ஒத்தது.
அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். (49:12)

மேலும் ஒருஹதீஸ் புறம் சம்பந்தமாக பின்வருமாறு பேசுகின்றது.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
ஒரு முறை புறம் பேசுதல் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய திருத் தூதருமே அதிகம் அறிந்தவர்கள்என்று கூறினார்கள். அண்ணலார், ‘உன் சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கும் முறையில் நீ பேசுவதே புறம் பேசுவதாகும்
என்று கூறினார்கள். மீண்டும் நபியவர்களிடம் வினவப்பட்டது. கூறுகின்ற அந்த விடயம் (குறை) என் சகோதரனிடம் (உண்மையிலேயே) காணப்பட்டாலுமா (நான் அவனைப் புறம் பேசியவனவேன்)?’அண்ணலார் விளக்கினார்கள்: நீ கூறும் விடயம் (குறை) அவனுள் இருந்தால் அது புறம் பேசுவதாகும். நீ கூறும் விடயம் அவனிடம் இல்லையென்றால்அவனை நீ அவதூறாகப் பேசிவிட்டாய், அவன் மீது இட்டுக்கட்டி விட்டாய் என்பதாகும்.’(மிஷ்காத்)

விதி என்ற ஒன்று இருந்தால் விதிவிலக்கு என்ற ஒன்றும் இருக்கும் என்ற அடிப்படையில் சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் துறுவித் துறுவி ஆராய்வதும், சில குறைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் குறை பேசப்படாவிட்டால் தனிநபர்களுக்கோ, சமூகத்துக்கோ கேடு ஏற்படும் என்றால் அவரின் குறை சம்பந்தப்பட்டவர்களிடம் பேசப்படவேண்டும். உதாரணமாக திருமணம் பேசும்போது பெண் வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றி துறுவித் துறுவி ஆராய்வதும், மாப்பிள்ளை வீட்டார்  பெண்ணைப் பற்றி துறுவித் துறுவி ஆராய்வதும், ஏனையவர்களிடம் வினவப்பட்டால்  குறை நிறைகளை அவ்வாறே கூறுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு செய்யவில்லையென்றால் பெண் அல்லது மாப்பிள்ளையின் நலன் பாதிக்கப்படுவதே இதற்கான காரணம்.

சுருக்கம்

  • வாழ்க்கையில் அனைத்துப் பகுதியிலும் குர;ஆன் ஹதீஸ் பின்பற்றப்படவேண்டும்


  • இபாதத்திலும் நம்பிக்கைக் கோட்பாடுகளிலும் எவ்வாறு இது குர;ஆன் ஹதீஸில் இருக்கின்றதா? இல்லையா? எனஆராயப்படுகின்றதோஅதேபோல் பண்பாடு, பொருளாதார மற்றும் வாழ்வாதார விடயங்களிலும் ஆராயப்பட வேண்டும்.
  • இபாதத்தில் மாத்திரம் ஏற்படும் சீர;திருத்தத்தினால் மறுமையில் வெற்றியாளர;களாய் மாற முடியாது மாற்றமாக பண்பாட்டிலும் சீர்திருத்தம் வேண்டும்.


  • ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை திட்டுவது பெரும் பாவமாகும்.


  • கற்பனை என்பது எந்தவிதமான உண்மையையும் குறிக்காது.



  • கற்பனையின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்க முடியாது.


  • செயற்பாடுகளில் எவ்வாறு ஹராம் இருக்கின்றதோ அதேபோல் பண்பாடுகளிலும் ஹராம் உண்டு.


  • உள நோய்களின் செயற்பாட்டு வடிவத்தின் ஒரு பரிமாணம்தான் தகாத விமர்சனங்கள்.


  • எந்தவொரு மனிதனின் மனமும் புன்படும் வகையில் பரிகாசிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.


  • பழித்தல் என்பது நரகத்திற்கு இட்டுச் செல்லும் பாவங்களில் ஒன்றாகும்.


  • பட்டப்பெயர; சு+ட்டுவதை தடுக்கும் அல்லாஹ் ஒரு முஃமின் அதை செய்வது மிகமோசமான செயல் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றான்.


  • புறம் பேசுபவனின் மனப்பாங்கு இறந்த தனது சொந்த உறவின் இறைச்சியை உண்ண விரும்புபவனின் மனப்பாங்கை ஒத்தது.



No comments:

Post a Comment