Sunday, September 7, 2014

சமூக மாற்றத்திற்கு ஒரு களம் அமைப்போம்




அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திரு நாமத்தை கொண்டு ஆரம்பிக்கின்றேன்.
கட்டம்-01
அனைத்து புகழும், சர்வமும் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் எல்லாம் வல்ல இறைவனான அல்லாஹ்விற்கே சொந்தமாகும். புகழ்பாடிப் போற்றவும் புகல் தேடி கை நீட்டவும் தகுதியானவனே! உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ மாபெரும் கிருபையாளன், தயாளமானவன், உன்னை நோக்கி நீட்டப்படும் கைகளை, வெறுங் கைகளாக திருப்பி அனுப்ப வெட்கப்படுபவன் ஆகவே யா அல்லாஹ் எமது பாவங்களை மன்னித்தருள்வாயாக!. மேலும் எங்கள் எண்ணங்களினாலும், செயற்பாடுகளினாலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் தீங்குகளை விட்டும் எம்மை பாதுகாப்பாயாக!. யா அல்லாஹ் நீ எவரை நேர்வழியில் செலுத்தினாயோ அவரை எவராலும் வழிகெடுக்கவோ அல்லது நீ, யாரையெல்லாம் வழிகேட்டில் தட்டழியும்படி விட்டு விட்டாயோ அவர்களை நேர்வழிப்படுத்துவோ எவராலும் முடியவே முடியாது. மேலும் நீ மட்டுமே வணக்கத்திற்குரியவன். உன்னைத் தவிர எந்தப் படைப்பிற்கும் வணக்கத்திலே எந்தவிதப் பங்கும் இல்லை,
மேலும் முஹம்மது (ஸல்) அவனுடைய அடியாரும் திருத் தூதரும் ஆவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் நபியவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், அன்னாரின் தோழர்கள் மீதும், இறுதி நாள்வரை அன்னாரின் அடியொற்றி வாழும் ஆன்மாக்களின் மீதும் என்றென்றும் உண்டாவதாக!!!

மனிதனை அல்லாஹுத்தஆலா இவ்வையகத்தில் முதற் பிரதிநிதியாக்கிய நாள் முதற் கொண்டே அவனுக்கான வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டே வந்தான். இவ்வாறாக வழங்கப்பட்டு வந்த வழிகாட்டல்கள் மானுட விருத்தியினைப் பொருத்து காலத்திற்கு காலம் செம்மையாக்கப்பட்டு வந்தது. இவ்வாறாக வந்த வழிகாட்டல்கள் எல்லாச் சமுதாயத்தவர்களுக்கும் ஒன்றாகக் காணப்படவில்லை. கடைசியில் மானுட விருத்தியானது போதுமான அளவு வளர்ச்சியினை அடைந்ததன் பிற்பாடு முழு மனித சமுதாயத்திற்குமான ஒரு வழிகாட்டலாக அல்குர்ஆனை வழங்கி அதனை வழிகாட்டல்களின் முத்திரையாகவும் (கடைசியானதாகவும்) ஆக்கிவிடுகின்றான். இவ்வாறாக முஹம்மது (ஸல்) அவர்களை தனது இறுதித் தூதுவராக ஆக்கி, சாந்தியையும், சமாதானத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஆதிதொட்டு வந்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலையான கட்டளைகள் மூலம் ஸ்தீரப்படுத்தி விடுகின்றான்.
மேலும் அல்லாஹுத்ஆலா தனது வழிகாட்டல்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க தான் தேர்ந்தெடுத்த தனது அடியார் குறித்து கூறுகையில்:

“(நபியே!) நிச்சயமாக நீர் நற்குணத்தில் உள்ளீர்” (68: 4)


(நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை”
(21: 107)

என்று சான்று பகர்கின்றான்.
  • இவ்வாறு நற்குணத்தில் உள்ளவராக இறைவன் விளிக்கும் நபி (ஸல்)  அவர்கள் மூலமாக அகிலத்தாராகிய நாம் பெற்ற அருளென்ன??
  • நபி (ஸல்) அவர்கள்தான் இன்று எம் முன் இல்லையே!... அவ்வாரென்றால் நாம் அந்த அருளிலிருந்து பாக்கியமற்றவர்களாக ஆக்கப்பட்டு விட்டோமா???
  • நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் நபியவர்கள் எவ்வாறு அந்த சமுதாயத்திற்கு அருளாக இருந்தார்கள்???...... அந்த சமுதாயத்தில் என்ன நிகழ்ந்தது????......

இவ்வாறான கேள்விகள் எல்லாம் பகுத்தறிவுள்ள ஒவ்வொரு புத்தி ஜீவியினதும் மனதில் சலனத்தை உருவாக்குகின்ற கேள்விகளாகும்.
ஆம், நிச்சயமாக அவர் ஒரு மாபெரும் அருளாகவே அந்த சமுதாயத்தில் தோன்றினார். அவரின் அருளின் மாட்சி எத்தகையதுவெனில்....... மிக மிக கீழ்த்தரமாகவும், கட்டுக்கோப்பற்றவிதத்திலும், மடைமையின் உச்ச கட்டத்திலும், மூட நம்பிக்கைகளில் மூழ்கிய நிலையிலும் காணப்பட்ட ஒரு சமுதாயத்தை, உலகம் போற்றும் சீரிய வல்லரசுகளாக ஓர் இரு தசாப்தங்களிற்குள் மாற்றியமைத்தது. கலை, கல்வி, கலாச்சாரங்களில், மற்றும் பண்பாட்டு விழுமியங்களில் மிகச் சிறந்ததொரு நாகரீகத்தை உருவாக்கியது.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறெல்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக அமைந்துள்ளார்?? என்பதை ஆராய முற்பட்டால் அது ஒரு மாபெரும் நூலகத்தையே உருவாக்கிவிடும். எனினும் எனது நோக்கம் அதுவல்ல, மாறாக இவற்றையெல்லாம் ஓர் இறை வழிகாட்டலைப் பெற்ற ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு நிகழ்த்திக் காட்டினார் என்பதுவேயாகும்???
நாம் திரையில் பார்ப்பது போல மாய மந்திரங்களைப் பயன்படுத்தினாரா?
அல்லது மக்களை மாற்ற பில்லி,சூனியம்,மாந்திரீகம் போன்ற ஏதாவதொரு கலையைக் கற்றிருந்தாரா??
அல்லது திரையில் காட்டுவது போல் மனிதர்களுக்கெல்லாம் அருள் ஒளியினை அள்ளி வீசித் திரிந்தாரா??
இல்லை. அப்படியென்றால் அச்சமுதாயத்தை புடம்போட்ட அந்த அருள்தான் என்ன?
அதுதான் நபியவர்கள் இறை வழிகாட்டலின் கீழ் வாழ்ந்த வாழ்க்கை, பேசிய வார்த்தைகள், வழங்கிய தீர்ப்புக்கள், கொடுத்த அங்கீகாரங்கள், எடுத்த தீர்மானங்கள்......... இவைதான் அச்சமுதாயத்திற்கு அருளாக அமைந்தன.
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறெல்லாம் மனித குலத்திற்கு அருட்கொடையாக அமைந்துள்ளார்?? என்பதை ஆராய முற்பட்டால் அது ஒரு மாபெரும் நூலகத்தையே உருவாக்கிவிடும். எனினும் எனது நோக்கம் அதுவல்ல, மாறாக இவற்றையெல்லாம் ஓர் இறை வழிகாட்டலைப் பெற்ற ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு நிகழ்த்திக் காட்டினார் என்பதுவேயாகும்???

நாம் திரையில் பார்ப்பது போல மாய மந்திரங்களைப் பயன்படுத்தினாரா?
அல்லது மக்களை மாற்ற பில்லி,சூனியம்,மாந்திரீகம் போன்ற ஏதாவதொரு கலையைக் கற்றிருந்தாரா??

அல்லது திரையில் காட்டுவது போல் மனிதர்களுக்கெல்லாம் அருள் ஒளியினை அள்ளி வீசித் திரிந்தாரா??

இல்லை. அப்படியென்றால் அச்சமுதாயத்தை புடம்போட்ட அந்த அருள்தான் என்ன?
அதுதான் நபியவர்கள் இறை வழிகாட்டலின் கீழ் வாழ்ந்த வாழ்க்கை, பேசிய வார்த்தைகள், வழங்கிய தீர்ப்புக்கள், கொடுத்த அங்கீகாரங்கள், எடுத்த தீர்மானங்கள்......... இவைதான் அச்சமுதாயத்திற்கு அருளாக அமைந்தன.

நபி (ஸல்)அவர்கள் மனித குலம் அனைத்திற்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார். அவரது தலைசிறந்த நல்லொழுக்கங்கள் மற்றும் பண்புகள் காரணமாக மக்கள் மத்தியில் மிகச் சிறந்த மனிதராக காணப்பட்டார்.

வீட்டினுள்ளே அவர் ஒரு சிறந்த கணவராக, ஒரு பாசமுள்ள தந்தையாக, மற்றும் ஒரு தனித்தன்மை வாய்ந்த தாத்தாவாகவும் . அவர் வீட்டிற்கு வெளியே ஒரு பெரிய அரசியல் மேதையாக, நீதிபதியாக, மற்றும் ஆன்மீக தலைவராக என அவரது ஆளுமை பல்துறைகளிலும் வியாபித்திருந்தது. இவ்வாறெல்லாம் தன் வாழ்வில் சாதிக்க எப்படி ஒரு சாதாரண, படிப்பறிவே இல்லாத மனிதனால் முடிந்தது??.... இந்தக் கேள்விற்குரிய விடையை பலரும் பலவித கண்ணோட்டங்களில் முன்வைக்கலாம். ஆனால் எம்மில் பலர் பொதுவாக கொண்டுள்ள கண்ணோட்டங்களிற்கு அமைவாக ஒரு விடையை மிக மிக சுருங்கக் கூறின்....

*       தெளிவான பார்வை
*       இலக்குகளை அமைக்கும் ஆற்றல்
*       திட்டமிடல் மற்றும் ஆக்கமுறையான, உடன்பாடான சிந்தனைப் போக்கு
*       தூரநோக்கும் துல்லியமான எதிர்வுகூரலும்
*       அறிவு மற்றும் அனுபவ ரீதியிலான சாணக்கியம்
*       படிமுறை ரீதியில் அமைந்த நேர்த்தியான அணுகுமுறைமைகள்
*       தியாக உணர்வும், பொறுப்புணர்வும்
*       உள்ளார்ந்த உத்வேகம்
*       திறமை மற்றும் தன்னம்பிக்கை
*       தனது நிறை குறைகளை அறிந்திருத்தல்
*       வினைத்திறனான மாற்றங்களை உருவாக்கும் ஆற்றலும் அவற்றை நடைமுறைச்சாத்தியமாக்கலும்
*       மாற்றங்களிற்கு (சவால்களிற்கு) பிடிகொடுத்து நிற்கும் ஆற்றல்
*       பொறுமையும், சகிப்புத்தன்மையும்
*       சுய கட்டுப்பாடு
*       மனித நேயமும் உறவுகளை பேணலும்
*       விவேகம்
*       ஆளுமை...... என அடுக்கிக் கொண்டே போகலாம்.




மேற்கூறிய அனைத்தும் எதை குறித்து நிற்கின்றன?

ஒரு சிறந்த தலைமை கொண்டிருக்க வேண்டிய பண்புகளையல்லவா!! இதுவல்லவா இறைவன் கூறிய அருள்!! இவைகளை விட்டுத் தூரமானால், இறை அருளை விட்டுத் தூரமாக வேண்டியேற்படும் அல்லவா??? இறை அருளின்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டல்லவா இருக்கிறோம்??? எத்தனை இரவுகளைத் தேம்பித் தேம்பி கழித்தோம்,கழிக்கின்றோம்?? ஒரு காவியுடை அணிந்த மனிதர் சற்றுக் கணைத்தாலும் போதும் எவ்வளவு நெஞ்சு பதறுகிறது, எவ்வாறெல்லாம் கூனிக் குறுகி குலை நடுங்கி நிற்கின்றோம்??? ஏன் இந்த நிர்க்கதியான நிலை நமக்கு??? ஒரு காலம் இருந்தது, அப்போது ஒரு முஸ்லிம் உலகின் எந்தவொரு பிரதேசத்தில் வசித்திருந்தாலும், அவனுக்கு ஓர் அநீதி இழைக்கப்படுமாயின் அந்த அநீதியைத் தட்டிக் கேட்க நம் உம்மத்திற்கொரு தலைமை இருந்தது. ஏன் சில சந்தர்ப்பங்களில் ஒரு தனி முஸ்லிமிற்காக படையெடுப்பையே மேற்கொண்டுள்ளது. ஆனால் இன்று எமது நிலை எவ்வாறுள்ளது?? இன்று அரசியற் கூலிகளால் எமது முஸ்லிம் தொட்டில் பிள்ளைகள் கிள்ளி விளையாடப்படுகின்றனர், அரசாங்கமோ அரேபிய தேசங்கள் எட்டிப் பார்க்கும் போது தொட்டிலை ஆட்டுவது போல் பாசாங்கு செய்கிறது. ஏன் இந்த இரட்டை வேடம்? அரேபிய நாடுகள் கிள்ளிப் போடும் மிச்ச மீதிகளை இழந்துவிடாமல் இருக்கவல்லவா??? 

நாளை இந்த அரேபிய நாடுகளும் நாதியற்று நிற்கும், அப்போது எம்மை எட்டிப் பார்க்கக் கூட யாரும் இருக்க மாட்டார்கள், அப்போது எமக்கு (எம் பிறவாக் குழந்தைகளிற்கு) விளங்கும் இந்த இரட்டை வேடதாரிகளின் சுய ரூபம். எங்களது குழந்தைகளை தெருவுக்குத் தெரு பந்தாடுவார்கள். அப்போது அடிமைகளாக வாழும் எம் குழந்தைகளிற்கு உரிமைகள் குறித்துப் பேச எந்தவித அதிகாரமும் இருக்காது. 
தலைமையை இழந்ததனால் நாம் அனுபவிக்கும் மற்றுமோர் சாபக்கேடு, மார்க்கத்தை துண்டாக்கி, மக்களை கூறுபோட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி மக்களை மார்க்கத்திலிருந்து தூரமாக்கும் யூதப் பின்னணியையோ, அறிவீனத்தையோ மூலாதாரமாகக் கொண்ட இயக்கங்கள். ஒரு தலைமை எமக்கென்று இருந்திருந்தால் முன்னைய காலத்தில் தோன்றிய வழிகேடர்களை நசுக்கியது போல் நசுக்கி இருப்பார்கள். மேலும் முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்திருப்பார்கள்.இப்படி.. இப்படியென.... எத்தனையோ மேலும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இத்தனைக்கும் குற்றவாளிகள் யார்???? 


தலைவர்களா???? 


யார் அந்தத் தலைவர்கள்??? முஸ்லிம் அரசியல்வாதிகளா??? பள்ளியில் உள்ள ஆலிம் ஷாவா??? ஊரில் உள்ள படித்த மேதைகளா??? ஊரில் உள்ள தனவந்தர்களா??? இல்லை ஊர் குறை பேசித் திரியும் மா பண்டிதர்களா???

நிச்சயமாக இல்லை. நாம்தான் குற்றவாளிகள், ஏனெனில் நாம்தான் அந்தத் தலைவர்கள். யாரும் பிறக்கும் போதே தலையில் மகுடத்தை சூடிக்கொண்டே பிறப்பதில்லை, தலைவர்கள் உருவாகின்றார்கள் அவர்கள் மேற்கூரிய நபி (ஸல்) அவர்களின் ஆளுமை ஆற்றல்களை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களின் ஆளுமையின் அளவிற்கேற்ப மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெறுகின்றது. எனவே நாமும் தலைவர்கள்தாம் எமக்குள்ளும் ஆற்றல்கள், ஆளுமைகள் இருக்கத்தான் செய்கிறது, அவற்றை நாம் புடம் போட வேண்டும். எமது ஆளுமையின் அளவு விருத்தியடைய விருத்தியடைய இறைவனின் அருள் எம்மீது சொரியப்படுவதை நாம் கண்கூடாகவே கண்டுகொள்வோம். எனவே இனிவரும் காலங்களிலாவது எமது செயற்பாடுகளை நபிவழிப் படுத்துவோம். (இன்ஷா அல்லாஹ்).

இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நீங்கள் அனைவரும் பொருப்பாளர்களாவீர்கள். உங்களில் அனைவரும் அவரது பொருப்புப்பற்றி கேள்வி கேற்கப்படுவீர்கள். தலைவரும் பொருப்புதாரரே! அவர் தன் பொருப்பு பற்றிக் கேற்கப்படுவார். ஒரு மனிதர் தன் குடும்பத்திற்கு பொருப்பாளியாவார். ஒரு பெண் தன் கணவனின் வீடு, மற்றும் குழந்தைகளுக்கு பொருப்பாளியாவாள். நீங்கள் அனைவரும் பொருப்பாளர்களாவீர். உங்களில் அனைவரும் தன் பொறுப்புப் பற்றி கேள்வி கேற்கப்படுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.                                (புகாரி:893, முஸ்லிம்:1829)


எனவே ஏட்டுச் சுரக்காயாகவுள்ள நபி வாழ்வு, இறை அருள் எனும் கறியாக வேண்டுமென்றால் முதலில் அதற்கான களத்தை நாம் உருவாக்க வேண்டும், மண்ணை தயார் செய்ய வேண்டும், விதையைத் தூவ வேண்டும், பசளையிட வேண்டும், நீர் பாய்ச்ச வேண்டும், அது வளர்ந்து வரும் போது அதை எதிர்த்துவரும் களைகளை பிடுங்க வேண்டும்..... இதன் பிற்பாடே கறி பற்றி யோசிக்க முடியும்.

ஆகவே எம்மால் முடிந்த விதத்தில் முதலில் களத்தை தயார் செய்வோம். எனவே களத்தை தயார் செய்வதில் நாம் எதிர்கொள்ளத்தக்க சவால்கள் என்ன??? அதற்காக எம்மால் முன்வைக்கத்தக்க தீர்வுகள் என்ன என்பதையெல்லாம் எனதறிவுக்கெட்டிய விதத்தில் பகுத்தாராய்துள்ளேன். உங்களில் சிறந்த அறிஞ்சர்கள் இருக்கலாம், உங்களால் இதைவிட சிறந்த முறையிலான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கலாம். எது எவ்வாறாயினும் எமது எதிர்கால சந்ததியினரின் நலத்தினை கருத்திற்கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ள திடசங்கற்பம் பூணுவோமாக.



சமூகத்தின் முன்னேற்றத்திற்கு களம் அமைப்பதற்காக முதலாவதாக நாம் எடுத்துக் கொள்ளும் விடயம் மார்க்கக் கோட்பாடுகளையோ, மார்க்க சட்டங்களையோ மையப்படுத்தியதாகவோ அமையாது. மாறாக சமூக ரீதியாக நாம் எதிர்கொள்ளும் சவால்களிற்கு நாம் எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்பதேயாகும். சுருங்கச் சொல்வதாயின் ‘எமது சமுதாயத்தை எப்படி நாம் முன்னேற்றுவது’ என்பது குறித்து ஆராய்வதாகும்.


நமது நாட்டிலும் ஏனைய பல முஸ்லிம் நாடுகளிலும் இன்றைய எமது நிலைமையைய் கருத்திற் கொண்டு சில முன் மொழிவுகளை முன் வைக்க ஆசைப்படுகிறேன்.

முதலில் இன்று நாம் உலகளாவிய ரீதியில் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் யாவை என ஆராய்வோம்......
  1. இனப் பிரச்சினை
  2. இயக்க ரீதியிலான பிளவுகள்/ஒற்றுமையின்மை
  3. இஸ்லாத்தின் பெயரால்/ முஸ்லிம்கள் என்ற போர்வையில் அறிமுகமாகி வரும் புதிய மக்கள்
  4. கல்வியறிவில் பிற்போக்கான நிலை
  5. ஸ்தீரமற்ற அரசியல் தலைமைகள்
  6. தனித்தன்மையை இழந்து இனத்துவமாக வாழும் மக்கள்
  7. தீவிரவாதிகள், அடிப்படைவாதிகள், குருட்டுத் தனமான சிந்தனையையுடையவர்கள், பெண்ணடிமைத்துவத்தை நடைமுறைப் படுத்துபவர்கள் போன்று ஊடகங்களால் சித்தரிக்கப் படும் அவல நிலை
  8. பல்துறைசார் அறிஞர்களின் பற்றாக்குறை
  9. எந்தவொரு பிரச்சினையின் போதும் ஏனைய சமுதாயத்தினரிடையே அல்லது நாடுகளிடையே கையேந்தி நிற்கும் அவல நிலை
  10. முஸ்லீம்களிடையே காணப்படும் பொருளாதார பிரச்சினைகள்
  11. முஸ்லீம்களின் சொத்துக்களும் நிலங்களும் சூறையாடப் படல்
  12. முஸ்லிம்களின் மார்க்க அனுஷ்டானங்களை மேற்கொள்வதில் ஏற்பட்டு வரும் பிரச்சினைகள்.......
  • மேலே நாம் கருத்திற் கொண்ட பிரச்சினைகள் நடந்து வரும் நாடுகள், பிரதேசங்கள், பிரச்சினைகளின் வகைகள்..... ஏனையவை
 பலஸ்தீன்- (காஸா): (மிகச் சுருக்கமான நோக்கு)
  • முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் சூறையாடப்படல்,
  • உயிர்ச்சேதங்கள்,
  • சொத்துக்கள் அழிக்கப்படல்,
  • பொருளாதாரத் தடை,
  • அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதில் எதிர் கொண்டுள்ள குறைபாடுகள்,
  • இட நெருக்கடி,
  • சூழல் மாசடைதல், மருத்துவ மற்றும் ஏனைய வசதிகளின் பற்றாக்குறை...
ஈராக்
சிரியா
எகிப்து
மியன்மார்
இந்தியா
சீனா
இலங்கை:- (பிரதானமாக நமது நாட்டை அடிப்படையாகக் கொண்டே கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

  • முஸ்லிம்களிற்கு எதிராக உருவாகியுள்ள இயக்கங்கள்(bbs,ராவய,) பத்திரிகைகள், ஊடகங்கள்(வானொலி,தொலைக்காட்சி,வலையுகம் சார் ஊடகங்கள்).....
  • முஸ்லிம்கள் குறித்தான பிழையான கண்ணோட்டமும் காழ்புணர்வும்
பயங்கரவாதிகள்
அடிப்படைவாதிகள்
பிற்போக்கானவர்கள்
குருட்டுத்தனமான நம்பிக்கையுடையவர்கள்
சுயநலவாதிகள்
பெண்களை கீழ்த்தரமாகவும் அசுத்தமாகவும் கருதுபவர்கள்
பெண்களை இழிந்தவர்களாகவும் அடிமைகளாகவும் பயன்படுத்துபவர்கள்
ஜீவகாருண்யம் அற்றவர்கள்
பெண்களை இச்சையை தீர்த்துக் கொள்ளவும் சந்ததிகளை பெருக்கிக் கொள்ளவும் பயன்படுத்துபவர்கள்
மூர்க்கமானவர்கள்
கீழ்த்தரமானவர்கள்
தேசபக்தி அற்றவர்கள்
நாகரீகம் மற்றும் பண்பாடுகள் அறியாதவர்கள்
நயவஞ்சகர்கள்/கபடதாரிகள்
  • முஸ்லிம்கள் குறித்து பெரும்பான்மை மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை
முஸ்லிம்கள் ஏனைய பௌத்த நாடுகளை ஆட்கொண்டது போல் இலங்கையையும் ஆட்கொள்வார்கள்
தமது சந்ததிகள் (தற்காலத்தில் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுவரும்) இஸ்லாம் என்ற மதத்தை பின்பற்றி விடுவார்கள்
முஸ்லிம்கள் தமது பொருளாதாரத்தை விழுங்கி விடுவார்கள்...

  • இன முறுகல்களும் இனக் கலவரங்களும்
உயிர்ச் சேதம்
பொருளாதார இழப்புகள்
பாதுகாப்பற்ற தன்மை
மனக்கசப்புக்கள், மன உளைச்சல்கள், பகைமையுணர்வுகள்
பக்கச் சார்பான இனத்துவ, அரசியல் காய் நகர்த்தல்கள்....
  • முஸ்லிம்களின் பொருளாதாரம் குறிவைக்கப்படல்
  • முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களையும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையும் இழக்க வேண்டிய துர்பாக்கிய நிலை
  • இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை கருத்திற் கொள்ளாமை
  • கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய துறை சார் சேவைகளில் இரண்டாம் பட்சமாக கருதப்படும் நிலை
  • {முதலில் பார்க்கப்பட்ட பொதுமைப்பாடான பிரச்சினைகள்}
  • ஏனைய சிறுபான்மையினரால் தூண்டப்பட்டுவரும் இனத்துவேஷங்கள்
  • மறைவாக செயற்படும் NGO களும், சர்வதேச அரசியலும்

 கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட் சில பிரச்சினைகள்
  • 1915 இல் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் கோலாகலய
  • காத்தாங்குடியில் முஸ்லிம்கள் மீது ltte இனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு
  • முஸ்லிம்கள் ltte இன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப் படல்
  • கிரீஸ் மனிதன்
  • ஹலால் பிரச்சினை
  • முஸ்லிம் இயக்கங்களை தடை செய்வதற்கான நடவடிக்கைகள்
  • முஸ்லிம்களின் நிலபுலங்கள் அபகரிக்கப்படல்
  • முஸ்லிங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப் படல்/எரியூட்டப் படல்
  • முஸ்லிம்கள் மீதான அவதூறான பிரச்சாரங்கள்
  •  முஸ்லிம்களிற்கு எதிரான கண்டனப் பேரணிகள் etc..
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்டு சம காலத்தில் அனுபவித்து வரும் பிரச்சினைகள்
  •  முஸ்லிங்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப் படல்/எரியூட்டப் படல்
  • முஸ்லிம்கள் மீதான அவதூறான பிரச்சாரங்கள்
  • முஸ்லிம்களிற்கு எதிரான கண்டனப் பேரணிகள்

புதிதாக ஏற்பட்டு வரும் பிரச்சினைகள்
  • சமூகங்களிற்கிடையே ஒற்றுமையின்மை
  • உறுதியற்ற அரசியல் தலைமைகள்
  • அரசின் மீதான சர்வதேச அழுத்தங்கள்
   
ஆபத்தான அறிகுறிகள்
  •         இலங்கை முஸ்லிம்களின் நாட்டுப் பற்றின்மை
  •        முஸ்லிம்களின் இருப்புக் குறித்து ஏற்பட்டுவரும் பிரச்சினைகள்
  •    முஸ்லிம்கள் சொத்து சுகங்களிற்கு அடிமைப்பட்டு வாழ்வதால் சொத்துக்களை இழப்பதில் உள்ள பயமும் இதனாலான கோழைத்தனமும்
  •      முஸ்லிம்களிடையே பகை, பொறாமை, பிரதேசவாதம்
  •         தற்பொருமை மற்றும் பொருளாதார ரீதியிலான பிரிவினைவாதம்
  •   அறியாமை, மிகைப் படுத்தி கூறப்பட்டு வரும் பிரச்சாரங்கள்
  •   போதைவஸ்துப் பாவனை, விபச்சாரம்....
  •        பொருத்தமற்ற பள்ளி நிருவாகத் தேர்வும், பொருத்தமற்ற பள்ளி நிருவாகிகளும்
  •   நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்பான குர்ஆன் ஹதீஸ்களை அறியாமையும், நடைமுறைப்படுத்தாமையும்
  •   சமூகவியல் குறித்த அறிஞர்கள் இன்மை
  •   பல்துறைசார் அறிஞர்களும், கலைஞர்களும் இன்மை
  •   முஸ்லிம் சமூகத்திற்கென ஊடகங்கள் இன்மை (இஸ்லாத்திற்கல்ல)
  • பெரும் கேள்விற் குறியாக நிற்கும் முஸ்லிம்களின் அரசியல்
  •   முஸ்லிம்களை கேவலப்படுத்த, கேள்விக்குறியாக்க, மற்றும் குறி வைத்துத் தாக்க திட்டமிட்டு அமுல் நடாத்தப்பட்டுவரும் சூழ்ச்சிகள்
பிரச்சினைகளின் பங்காளிகளாக தொக்கி நிற்கும் பாரம்பரீய ரீதியிலான இயல்புகள்
  • இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்களத்தை திறம்படக் கற்காமை
  • இஸ்லாத்திற்கு எதிரான பாரம்பரீயங்களும் சம்பிரதாயங்களும்
  • வியாபார சமூகம் என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளல்
பிரச்சினைகளின் இயற்பியல் உருவாக்கம்
  •      முஸ்லிம்கள் இலங்கைக்கு இஸ்லாமிய கிலாபத் அமுலில் உள்ள காலத்தில் பிரதானமாக சிறந்த வியாபாரிகளாக இலங்கையை வந்தடைகின்றனர். பிற்பாடு இலங்கையில் அக்காலங்களில் அரசாண்ட மன்னர்கள், முஸ்லிம்களால் ஏற்பட்டுவரும் நன்மைகளை கருத்திற் கொண்டு அவர்களை சிறந்த மரியாதையோடு தம்மோடு வைத்துக் கொள்கின்றனர். அவர்கள் இலங்கை வாழ் சிங்களப் பெண்களை திருமணம் முடிக்கின்றனர். மேலும் பலர் இஸ்லாமிய தஃவாவின் விளைவாக இஸ்லாத்தை ஏற்கின்றனர். பிற்பட்ட காலங்களில் பல கள்ளத் தோணிகளும் வந்து சேர்கின்றனர். மேலும் அக்காலத்தில் பல்துறைசார் அறிஞ்சர்களும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப் படுகின்றனர். பின்னர் முஸ்லிம்கள் இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் மிக முக்கியமான கதாபாத்திரங்களாக மாறுகின்றனர். இக்காலகட்டத்தில் இலங்கையில் பெரும்பான்மையினராக பௌத்தர்கள் காணப்பட்ட போதிலும், அனேகமான சந்தர்ப்பங்களில் ஆளும் வர்க்கமாக தென் இந்திய வம்சாவழி மக்களே காணப்பட்டனர். பிற்பட்ட காலங்களில் ஒல்லாந்தர்கள், போர்த்துக்கேயர்கள் இலங்கை மீது போர்த்தொடுத்தனர் மேலும் அவர்கள் கைப்பற்றிய பிரதேசங்களில் கிரிஸ்தவத்தை பரப்பினர். ஈற்றில் ஆங்கிலேயர்களால் இலங்கை முற்றாக கைப்பற்றப்பட்டது. அத்தோடு இலங்கையில் அரச பரம்பரையின் ஆட்சி முடிவுக்கு வந்தது. மேலும் கடைசியாக இலங்கையை ஆண்ட மன்னன் கூட ஒரு தமிழனேயாகும்.
  •       இலங்கையில் ஆங்கிலேயர்கள் கோலோட்சிய காலம் முஸ்லிம்கள் அவர்களது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினர், மேலும் தமிழர்கள் கலை கல்வியிலும் பௌத்தர்கள் விவசாயத்திலும் சிறந்து விளங்கினர். பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சிறுபான்மையினரின் வளர்ச்சியும், கிறிஸ்தவ மிஷனரிகளின் செயற்பாடுகளின் விளைவால் அதிகளவு மக்கள் பௌத்த தர்மத்தை விட்டு கிறிஸ்தவத்தை பின்பற்ற துவங்கியதாலும், இலங்கையில் மத வாதம் தலை தூக்க ஆரம்பித்தது.
  •    இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சி, மற்றும் ஆங்கிலேயரின் ஆட்சி என்பன முஸ்லிம் சமுதாயத்தை நலிவடையச் செய்து, கிறிஸ்தவர்களின் பலத்தை அதிகரிக்கச் செய்தது.
  •    இன் நிலையில் மதவாதிகள் தமது மக்களிற்கு விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக பலமற்ற நிலையிலுள்ள முஸ்லிம்களை குறிவைத்து தமது செயற்திட்டங்களை நகர்த்தினர். ஈற்றில் இதன் விளைவாக 1915 இல் பெரும் இனக் கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதன் போது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், சொத்துக்கள் அழிக்கப்பட்டது, முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன (சம காலத்திலும் இதனையே ஒத்த வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன).
  •    பின்னர் அதுவரை தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கம் விழித்துக் கொண்டு நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய மதவாதிகளுக்கு தூக்குத் தண்டனையை வழங்கியது.
  •  இதனைத் தொடர்ந்து அக்காலத்தில் வசித்த பிரபல சட்ட வல்லுனரான சார். பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் இந்த மதவாதிகளை தங்களது நண்பர்களாக எண்ணி அவர்கள் சார்பாக ஆஜராகி அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவித்தார். (இத்தகு கீழ்த்தரமான செயலைத் தமிழர் சார்பாக செய்து பெரும்பான்மை மக்களிடையே பெரும் ஆதரவினை பெற நாடியிருப்பார் போலும், எனினும் தாம் செய்த வினை பிற்காலங்களில் தமக்கு எதிராகவே அமைந்ததை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்)
  •    இதன் பிற்பாடு இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்களவர்களையும், சிங்கள மொழியையும் கூட வெறுத்தொதுக்கி தாம் ஒரு சுயாதீனமான சமூகமாக வாழத் தொடங்கியது.
  •    இதன் பிற்பாடு உருவான தமிழ் சிங்கள் அரசியற் பிரச்சினைகள், இரு தசாப்தங்களிற்கு முஸ்லிம்கள் மீதான பார்வையை மறைத்திருந்தது.
  •    இப்பொழுது மீண்டும் பெரும் பான்மையினரின் கோரப் பார்வை முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது.
பிரச்சினைகளின் உருவாக்கத்திற்கான நேரடிக் காரணிகள்
  • குர்ஆனிலிருந்து சுட்டிக் காட்டப்படும் சில வசனங்கள்
  • முஸ்லிம்கள் குறித்தான பிழையான கண்ணோட்டமும் காழ்புணர்வும்
பயங்கரவாதிகள்
அடிப்படைவாதிகள்
பிற்போக்கானவர்கள்
குருட்டுத்தனமான நம்பிக்கையுடையவர்கள்
சுயநலவாதிகள்
பெண்களை கீழ்த்தரமாகவும் அசுத்தமாகவும் கருதுபவர்கள்
பெண்களை இழிந்தவர்களாகவும் அடிமைகளாகவும் பயன்படுத்துபவர்கள்
ஜீவகாருண்யம் அற்றவர்கள்
பெண்களை இச்சையை தீர்த்துக் கொள்ளவும் சந்ததிகளை பெருக்கிக் கொள்ளவும் பயன்படுத்துபவர்கள்
மூர்க்கமானவர்கள்
கீழ்த்தரமானவர்கள்
தேசபக்தி அற்றவர்கள்
நாகரீகம் மற்றும் பண்பாடுகள் அறியாதவர்கள்
நயவஞ்சகர்கள்/கபடதாரிகள்

மறைமுகக் காரணிகள்
  •  பின்புலத்தில் செயற்பட்டுவரும் NGO கள்
  • முஸ்லிம்கள் என்ற போர்வையில் செயற்படும் இனக்குழுக்கள்
  • முஸ்லிகளிடையே உள்ள பிரிவினை
  • முஸ்லிம்களின் உறுதியற்ற தலைமைத்துவங்கள்
பிரச்சினைகளோடு தொடர்புபட்டு வரும் ஏனைய பொதுவான காரணிகள்/நிபந்தனைகள்/நிர்பந்தங்கள்
  • முஸ்லிம்களின் சமய விவகாரங்களை மேற்கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள்
  • பாதுகாப்பின்மை
  • மன அழுத்தம்
  • உத்தரவாதமின்மை
  • சிறு சிறு முஸ்லிம் குழுக்கள் உருவாகி ஒன்றுக்கொன்று முரண்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடல்
  • முஸ்லிம்களிடையேயான பிளவுகள் வலுப்பெறல்
  • முஸ்லிம்கள் தமது தலைமைகளிடம் நம்பிக்கை இழத்தல்
 
கட்டம்-02
   
 இப்பொழுது குறித்த ஒவ்வொரு பிரச்சினையிற்கும் தீர்வுகளை பெறுவதற்கான ஒரு பொதுமைப்பாடான முறைமையைப் பார்ப்போம் (இவற்றுள் சில, சில பிரச்சினைகளிற்கு பொருந்தாது)

அடுத்து நாம் கருத்திற் கொள்ள வேண்டிய விடயம், பிரச்சினைகளை இணங்காணல்
  • பிரச்சினையின் தோற்றம்/வரலாறு
  • அதிக ஆபத்திற்கு உள்ளாக தக்க வயதினர்/மக்கள்/பிரதேசவாசிகள்
  •   பௌதீக ரீதியிலான சான்றுகள்
  • இணங்காணலுக்கான பரிசோதனைகளும், விளக்கமும் 
  •   பிரச்சினையை இணங்காணல்
  • பிரச்சினைகளை உறுதிப்படுத்தலும், அதற்கான தொடர்ச்சியான செயற்பாடுகளும்
தீர்வுகள்
  • முதற் கட்டம்
  • இரண்டாம் கட்டம்......
  • எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
  • கருத்திற் கொள்ள வேண்டியவை
மேலதிக தீர்வுகள்
  •  மேலதிக அளவைகள்
  •  மாற்றுத் தீர்வுகள் (கடந்த கால தீர்வுகள்) மற்றும் மேலதிக செயற்பாடுகள்
பிரச்சினைகள் உண்டெனக் கூறும் மூலப் பிரமாணம்/தேர்வு முறை
  •  பிரச்சினை நிவாரண மூலப் பிரமாணம்
  • தொடர்ச்சியான பராமரிப்பு
 நடைமுறைகளும், முன்மொழிவுகளும்
நடைமுறை சிக்கல்களை எதிர் கொள்ளலும், அவற்றை சமாளித்தலும்
பிரச்சினைகள் குறித்து மக்களிற்கு விளிப்பூட்டல்
  • முன்னேற்ற அறிக்கை
  • பிரச்சினை தீர்ந்த பிற்பாடான விளைவு
  • மேலதிக ஆய்வுகள்
  • மேற்குறித்த தீர்வினைப் பெரும் போது கருத்திற் கொள்ளப்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகள், ஆதாரங்கள்.
          
கட்டம்-03
           
 மேற்கூறிய இப் பிரச்சினைகளிற்கு நான் முன் வைக்கும் நீண்டகால திட்டத்தின் முதல் முன்மொழிவு:

 ஊர் பள்ளி நிருவாக மட்டங்களிலான சீர்திருத்தம்

நோக்கம்:
  • முஸ்லிம் சமுதாயத்தை முன்னேற்றல்,
  • அறியாமை மக்கள் மத்தியிலிருந்து நீக்கப்படல்,
  •  இஸ்லாத்தை நடைமுறைக்கேற்றவிதத்தில் முன் வைத்தல்,
  • எதிர்காலங்களில் ஏற்படத்தக்க பிரச்சினைகள் உருவாகாமலிருக்க அல்லது எதிர்கொள்ள சமுதாயத்தை தயார் செய்தல்,

எனவே மேற்கூறிய அடைவுகளை அடைய பின்வரும் வரைவை வரைகின்றேன்.


 


தலைமைத்துவமும் சூரா சபையும்
இதன் கீழ் தலைவர் உட்பட ஓர் ஆலோசனைக் குழு உருவாக்கப்படல் வேண்டும். பின்னர் சமூக நலனைக் கருத்திற்கொண்டு பின்வரும் துறைசார் நிருவாக அமைப்புக்கள் நிறுவப்பட வேண்டும். இங்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது, சூரா சபையால் இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் முன்மொழியப்பட வேண்டும். அவர்களுள் ஒருவரைத் தலைவராக தெரிவு செய்ய தேர்தல் முறைமையொன்றினை உருவாக்கி மக்கள் மூலமாக ஒரு தலைவரை கொண்டுவர வேண்டும்.
பிரதானமாக ஒருவரால் பிரயரிக்கப்பட்டு, இன்னோருவரால் ஆமோதிக்கப்பட்டு தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை நீக்கப்பட வேண்டும். ஏனென்றால் இரண்டு நபர்களின் விருப்பம் முழு ஊரினதும் விருப்பாக கொள்ள முடியாது. மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உறவுகள் சீர்கெடும் என்ற அச்சத்தினால் பிரிதொருவரால் ஆட்சோபனை கூடத் தெரிவிக்க முடியாத ஒரு நிலைமை காணப்படும். எனவே தேர்தல் மூலம் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், அப்போதுதான் அதிகாரங்கள் அங்கீகாரம் பெறும். 

துறைகள்/அமைச்சுக்கள்
  1. சமய விவகார மற்றும் பிரச்சாரக துறை
  2. கல்வித் துறை
  3. கலை,கலாச்சார மற்றும் சுற்றாடற் துறை
  4. விளையாட்டு மற்றும் ஏனைய திறன்கள் தொடர்பான துறை
  5. நிதி மற்றும் பள்ளி நிருவாகத் துறை
  6. சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத் துறை
  7. (நீதித் துறை)
  8. (எதிர்கால அரசியல் விவகாரங்களை முன்னெடுக்கும் துறை)

சமய விவகார மற்றும் பிரச்சாரக துறை

நோக்கங்கள்
  • மக்களின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்களை மேம்படுத்தல்
  • மக்களின் மார்க்க அறிவினை மேம்படுத்தல்
  • மார்க்கத்தை நடைமுறைக்கு கொண்டு வருதல்
  • இஸ்லாத்தை நிலைநாட்டல்
  • உன்னதமான சமூகத்தை தோற்றுவித்தல்

செயற்திட்டங்கள்
  • மார்க்க சொற்பொலிவுகளை ஏற்பாடு செய்தல்
  • இறுவட்டுக்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகம்
  • குர்ஆன் மற்றும் ஹதீஸ் வகுப்புகளை ஏற்பாடு செய்தல்
  • ஈமானிய உணர்வூட்டும் புதுப் புது செயற்திட்டங்களை இணங்கண்டறிந்து நடைமுறைப் படுத்தல்
  • தப்லீக் ஜமாத் இன் செயற்பாடுகளை வினைத் திறனாக முன்னெடுத்தல்
  • பெண்களுக்காக விசேடமான செயற்திட்டங்களை வகுத்தல்
  • சிறார்களிற்கான விசேடமான செயற்திட்டங்களை வகுத்தல்........

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது

செயற்படுத்தலுக்கான கால வரையரை

நிபந்தனைகள்
  • இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்
  • இயக்கங்களிடையே கருத்து மோதல்களை உருவாக்கக் கூடாது
  • செயற்பாடுகள் அனைத்தும் ஊரின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் மையமாக கொண்டமைந்திருத்தல் வேண்டும்
  • கருத்துக்களிற்கும், செயற்பாடுகளிற்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும்
  • தலைவரின் தீர்மானத்தினை ஏகமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்

கல்வித் துறை

நோக்கங்கள்
  • படித்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புதல்
  •  இலக்குகளை நோக்கிய கற்கைகளை அறிமுகம் செய்தல்
  • சமூகத்திலுள்ள ஒவ்வொரு பிரஜையையும் வயது பேதமின்றி கற்கக் கூடியவர்களாக மாற்றல்
  • மார்க்க கற்கைகள் மற்றும் தனது துறையுடன் தொடர்பான மார்க்க நெறிகளை அறிந்து செயற்படுதல்
  • ஒழுக்கமான மற்றும் நன்னடத்தைகளை உடைய மக்களை உருவாக்குதல்
  • நாட்டையும் மக்களையும் நேசிக்கும் சமுதாயத்தை தோற்றுவித்தல்

செயற்திட்டங்கள்
  • வாசிகசாலை உருவாக்கல்
  • இலவச வகுப்புகளை நடாத்தல்
  • புலமைப் பரிசில் திட்டங்களை அறிமுகம் செய்தல்
  • மாணவர்களின் பின்னடைவுகள் இருப்பின் அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ளல்
  • மாணவர்களை ஊக்கப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • பாடசாலைகள் மற்றும் கல்விக்கூடங்களுடன் இணைந்து செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது

செயற்படுத்தலுக்கான கால வரையரை
நிபந்தனைகள்


கலை,கலாச்சார மற்றும் சுற்றாடற் துறை

நோக்கங்கள்
  • இஸ்லாமியக் கலைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற கலைகளை வளர்த்தல்
  • எமக்குறிய கலாச்சாரங்களை இனங்காணல்
  • சுற்றாடலை அழகுற அமைத்துக் கொள்ளலும் சுகாதாரத்தை பேணலும்

செயற்திட்டங்கள்
  • கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
  • போட்டிகளை இஸ்லாமிய வழிகாட்டலின் கீழ் நடத்தல்
  • பொருத்தமற்ற கலாச்சாரங்களை நீக்கி மாற்றீட்டு கலாச்சாரங்களை அறிமுகம் செய்தல்
  • சுற்றாடலை அழகுற அமைக்க வழிகாட்டல்களை வழங்கல்
  • செயற்திட்டங்களை உருவாக்கள் -ம்; வருமுன் காப்போம் preventional aspect of medicine”,  இலங்கையில் இஸ்லாமியர்களின் கலை, கலாச்சார பாரம்பரியங்களை இணங்காணல்
  • பொதுச் சொத்துக்களை அலகுற அமைத்து பராமரித்தல்
  • ஒழுக்கமுள்ள பண்பாடான சமுதாயத்தை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தல்

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது

செயற்படுத்தலுக்கான கால வரையரை
நிபந்தனைகள்

விளையாட்டு மற்றும் ஏனைய திறன்கள் தொடர்பான துறை

நோக்கங்கள்
  • வினைத்திரனான விளையாட்டுக்களை அறிமுகம் செய்தல்
  • இஸ்லாமிய வழிகாட்டல்களின் அடிப்படையில் விளையாட்டுக்களை அமைத்துக் கொடுத்தல்
  • விளையாட்டின் மூலம் தேகாரோக்கியமான, போராட்ட மனமுடைய்ய, சவால்களிற்கு முகம் கொடுக்கக் கூடிய சந்ததிகளை உருவாக்கள்                                                                 
  • சகல துறைகளிலும் திறன்களையுடைய நபர்களை இணங்காணல், மற்றும் அவர்களை ஊக்குவித்தல், களங்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

செயற்திட்டங்கள்
  • விளையாட்டுடன் தொடர்புடைய கழகங்களை நிறுவுதல்
  • விளையாட்டுக்களை இஸ்லாமிய மயமாக்கல்
  • புதிய விளையாட்டுக்களை அறிமுகம் செய்து போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தல்
  • தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடத்தக்க வீர்ர்களை உருவாக்குதல்  
  • உடற் பயிற்சிகள் மற்றும் தேகாரோக்கியம் தொடர்பான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்
  • இஸ்லாமிய விளையாட்டுக்களை அல்லது அதனை ஒத்த விளையாட்டுக்களை சமயோசிதமாக நடைமுறைப் படுத்தல்

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது
செயற்படுத்தலுக்கான கால வரையரை
நிபந்தனைகள்

நிதி மற்றும் பள்ளி நிருவாகத் துறை

நோக்கங்கள்
  • மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
  • தனி நபர் வருமானத்தை அதிகரித்தல்
  • சகாத் சேகரிப்பு மற்றும் பகிர்ந்தளித்தல் 
  • எதிர்காலத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை வகுத்தல் -ம், இஸ்லாமிய வங்கிகள், இஸ்லாமியப் பாடசாலைகள் உருவாக்கம்
  • பள்ளியை அழகாக நிர்வகித்தலும் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களை மேற்கொள்ளலும்

செயற்திட்டங்கள்
  • பள்ளியை மையமாகக் கொண்டு செயற்படும் நிறுவனங்களை நிறுவுதல்
  • பள்ளியின் வருமானத்தை அதிகரிக்க கடைகளை அமைத்தல், சட்டி பானை வாடகைக்கு விடல், காலண்டர்களை வினியோகம் செய்தல்.....
  • ஊரிலுள்ள மக்களின் தரவுகளை சேகரித்தலும் வெவ்வேறு மூலப் பிரமாணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தலும்.....

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது
செயற்படுத்தலுக்கான கால வரையரை
நிபந்தனைகள்

சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத் துறை

நோக்கங்கள்
  • இஸ்லாமிய வழிகாட்டலின் கீழ் சிறுவர் மற்றும் பெண்களின் பண்பாடுகளை சீரமைத்தல் 
  • இஸ்லாம் கூறும் பெண்களிற்கான உரிமைகளை பெற்றுக் கொடுத்தல்
  • சகல துறைகளிலும் பெண்களையும் பங்காளிகள் ஆக்கல்
  • ஆளுமை கொண்ட, ஆற்றல்மிக்க, சமூகத்தை வழிநடாத்தத் தக்க, நிருவாகத் திறங்களுடன் கூடிய பெண்களை உருவாக்கள்

செயற்திட்டங்கள்
  • பெண்களிற்கான மாதர் மஜ்லிஸ்களை ஏற்பாடு செய்தல்
  • சிறுவர்களிற்கான பூங்காக்கள்,மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தல்
  • பெண்களிற்கென விஷேடமாக சொற்பொழிவுகளை வாரத்திற்கு ஒருமுறை ஏற்பாடு செய்தல் (தஃவா கமிட்டியுடன் இணைந்து)
  • பெண்களிற்கென அழகியற் கலை குறித்த கற்கைகளை அறிமுகம் செய்தல்
  • சமூக சேவைகளை பெண்கள் முன் நின்று நடாத்துவதற்கு ஊக்கமளித்தல்
  • சிறுவர்களிற்கான சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்தல்

செயற்குழு உருப்பினர்கள்
  • பொருப்பாளர்
  • செயளாளர்
  • ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒர் உருப்பினன்

கோட்பாடுகள்
  • வாரத்திற்கு ஒரு முறை செயற்குழு பள்ளி வாயலில் ஒன்று கூட வேண்டும்
  • மூன்று மாதத்திற்கு ஒரு முறை தலைவரிடம் முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டும்
  • எந்தவொரு செயற்பாடும் தலைவரின் அங்கீகாரம் இன்றி நடைமுறைப் படுத்தப்படலாகாது
செயற்படுத்தலுக்கான கால வரையரை
நிபந்தனைகள்
(நீதித் துறை)
(பாதுகாப்புத்துறை)
(ஊடகத்துறை)
(எதிர்கால அரசியல் விவகாரங்களை முன்னெடுக்கும் துறை)
  • முதலில் நடைமுறைப் படுத்த மிகப் பொருத்தமானது கல்வித் துறை (முதல் நான்கு வாரங்கள்)
  • அடுத்து நிதி மற்றும் பள்ளி நிருவாகத் துறை (முதல் நான்கு வாரங்கள்)
  • அடுத்து விளையாட்டு மற்றும் ஏனைய திறன்கள் தொடர்பான துறை (இரண்டாவது நன்கு வாரங்கள்)
  • அடுத்து சமய விவகார மற்றும் பிரச்சாரக துறை (இரண்டாவது நன்கு வாரங்கள்)
  • அடுத்து சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத் துறை (மூன்றாவது நான்கு வாரங்கள்)
  • அடுத்து கலை,கலாச்சார மற்றும் சுற்றாடற் துறை (மூன்றாவது நான்கு வாரங்கள்)
மேற்கூறிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வரும் பிரச்சினைகளிற்கு அமைய்ய நிபந்தனைகள் உருவாக்கப்பட வேண்டும்.

“(இறை விசுவாசிகளே!) நீங்கள் ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்டால், அதனை அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் திருப்பிவிடுங்கள். நீங்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமை நளின் மீதும் நம்பிக்கை கொண்டோராக இருந்தால் இதுதான் சரியான வழிமுறையாகும்.....”  (4:59)
(தொடரும்...)

No comments:

Post a Comment