Friday, October 17, 2014

அக்ல் நக்ல் பார்வையில் பிக்ஹ்



முஹம்மத் இசாம் (நளீமி)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமத்தை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்.......

இஸ்லாமிய மார்க்கம் ஒரு பரிபூரண வாழ்க்கை வழிகாட்டி. இந்தப் பரிபூரணத் தன்மையை மனிதன் பரிபூரணமாக விளங்கி அதன் அடிப்படையில் தனது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காக வேண்டி அறிஞர்கள் இஸ்லாத்தை பல கலைகளாக கூறுபோட்டு ஆராய்கின்றனர். ஹதீஸ், உஸூலுல் ஹதீஸ், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், தப்ஸீர்,தஜ்வீத், மனாஹிஜுல் முஹத்திஸீன், மகாஸிதுஷ் ஷரீஆ, முகாரனதுல் அத்யான்……  என இஸ்லாமிய கலைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறான கலைகளில் அதிகமாக  மனித வாழ்க்கையுடன் பிண்ணிப்பினைந்த ஒன்றுதான் பிக்ஹ் ஆகும். இந்த சட்டக்கலைப் பற்றிய பரிபூரணமான ஒரு பார்வை இல்லை என்றாலோ அல்லது அதற்கே உரிய அணுகுமுறையில் அதை அணுகவில்லை என்றாலோ அதன் தாக்கமானது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமினதும் அன்றாட வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதனால் அதைப் பற்றிய ஒரு தெளிவை வழங்குவதெற்கான ஒரு சிறு முயற்சியே இந்த ஆக்கம். இந்த ஆக்கத்தில் பிக்ஹ் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகம், சில கிளைவிடயங்களில் முடிவான ஒரு முடிவை கூறமுடியாது என்பது பற்றிய விளக்கம் அதற்கான ஆதாரங்கள், நடைமுறையில் நாம் எதிர் நோக்கும் சில சட்டப்பிரச்சினைகளின் ஊடாக கருத்து முரன்பாட்டுக்கான சில நியாயங்கள் மற்றும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமது கடமை என்ன என்பது பற்றியதொரு தெளிவு என்பன இன்ஷா அல்லாஹ் அலசப்படும்.


பிக்ஹ் ஒரு சுருக்கமான அறிமுகம்

ஆரம்பமாக அக்ல் நக்ல் பார்வையில் பிக்ஹ்என்ற எமது தலைப்பை சற்று புரிந்துகொள்ளலாம். “அக்ல்என்பது பகுத்தறிவினையும்நக்ல்என்பது குர்ஆன் சுன்னாவையும் குறித்துநிற்கும் அரபிகளின் பாவனைச் சொற்கலாகும். ஒரு முஸ்லிம் நக்ல் எனும் குர்ஆன் ஹதீஸை அக்ல் எனப்படும் தனது பகுத்தறிவின் மூலம் சிந்தித்து சட்டதிட்டங்களை பெற்றுக்கொள்ளுதல் என்பதுவே எமது தலைப்பு குறித்துநிற்கும் கருத்து.
பிக்ஹ் என்று சொன்ன உடனே எமக்கு ஞாபகம் வருவது சட்டப்பிர்ச்சினைகள் தான் இது இப்பதத்தின் ஒரு சிறு பகுதியே தவிர முழுக்கருத்து கிடையாது. இப்பதமானது மார்க்கத்தின் ஏதாவது ஒரு பகுதியை அல்லது பல பகுதிகளை ஆழமாக விளங்குதல் என்ற விரிந்த கருத்தை குறித்துநிற்கின்றது. அல்லாஹ் இச்சொல்லை தனது திருமறையில் பின்வருமாறு பயன்படுத்துகின்றான்.

وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنْفِرُوا كَافَّةً فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

9:122. முஃமின்கள் ஒட்டு மொத்தமாக புறப்பட்டுச் செல்லலாகாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்று கொள்வதற்காகவும், (வெளியேறி சென்ற அவர்கள் பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

மேலும் நபிகளாரும் இச்சொல்லை ஆழமாக விளங்கிக்கொள்ளுதல் என்ற கருத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.
" من يرد الله به خيرا يفقهه في الدين
யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவருக்கு மார்க்கத்தில் ஆழ்ந்த அறிச்
வை கொடுப்பான்   புகாரி 71

"عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم دخل الخلاء ، فوضعت له وضوءا قال : " من وضع هذا فأخبر فقال اللهم فقهه في الدين"
நபி(ஸல்) அவர்கள் கழிப்பிட்த்துக்கு சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் இந்தத் தண்ணீரை யார் வைத்தது? என்று கேட்டார்கள். (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே இறைவா இவருக்கு மார்க்கத்தில் ஆழ்ந்த ஞானத்தை வழங்குவாயாகஎன்று பிரார்த்தித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.   புகாரி 14

வரலாறு நெடுகிலும் இச்சொல்லானது ஆழமாக விளங்குதல் என்ற கருத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஒரு சில உதாரணங்களை பார்த்துவிட்டு அடுத்த தலைப்புக்குள் நுழையலாம்.

·         فقه الأحكام   or فقه الظاهر   -   வெளிப்படையான அல்லது செயற்பாடுகளோடு சம்பந்தப்பட்ட சட்டங்களை ஆழமாக அறிதல்.
·         فقه الأخلاق  or فقه السلوك or فقه الباطل  -  அந்தரங்கமான அல்லது பண்பாடுகளோடு சம்பந்தப்பட்ட   சட்டங்களை ஆழமாக அறிதல்.
·         فقه النصوص  -  குர்ஆன் சுன்னாவை ஆழமாக விளங்குதல்.
·         فقه المقاصد  -   ஷரீஆவின் நோக்கங்களை ஆழமாக விளங்குதல்.
·         فقه السيرة   -   நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை ஆழமாக விளங்குதல்.
·         فقه الحضارة  -   நாகரீகம் மற்றும் கலாச்சாரம் சம்பந்தமான சட்டங்களை ஆழமாக விளங்குதல்.
·         Etc….

எனவே பிக்ஹ் என்பது மார்க்கத்தின் ஏதாவது ஒரு பகுதியை அல்லது பல பகுதிகளை ஆழமாக விளங்குதல் என்ற விரிந்த கருத்தை குறித்துநிற்கின்றது.

பிக்ஹை அணுகும் முறை

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு விடயத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும் என்றால் ஆரம்பமாக குர்ஆன் ஹதீஸ் அதைப்பற்றி எவ்வாறு வழிகாட்டுகின்றது என்பதை ஆராயவேண்டும். அந்த அடிப்படையில் பிக்ஹ் சம்பந்தமாக ஆராயும்போது பின்வரும் விடயங்களில் கரிசனைகாட்ட வேண்டும்.
·         பிக்ஹ் பற்றிய வசனங்கள் எவை அகீதா பற்றிய வசனங்கள் எவை என்பதை தெளிவாக பிரித்தரிய வேண்டும்.
·         குர்ஆன் ஹதீஸை விளங்கும்போது ஏனைய வசனங்களோடோ, நபியின் நடைமுறைகளோடோ முரண்படாத வகையில் விளங்கவேண்டும்.
·         நமது கருத்திற்கு ஏற்ப குர்ஆன் ஹதீஸை வலைக்கக்கூடாது.

பிக்ஹை அனுகும் முறை சம்பந்தமாக பேசுகின்ற சில புத்தகங்களில் மேற்கூறிய விடயங்கள் கருதிக்கொள்ளப்படாமல் எழுதப்பட்டிருப்பதனால் ஆரம்பமாக இதை நினைவூட்டியுள்ளேன். இங்கு பிக்ஹை அணுகும் முறை என்பதனால் நாம் நாடுவது குறிப்பிட்டதொரு கிலைச்சட்டப் பிரச்சினையில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் காணப்படுமாக இருந்தால் அதனை நாம் எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய விளக்கமாகும். இவ்வாரான சந்தர்ப்பங்களில் நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறை எவ்வாறு இருந்தது என்பதை பின்வரும் சம்பவங்கள் படம்பிடித்து காட்டுகின்றன.

حدثنا عبد الله بن محمد بن أسماء ، قال : حدثنا جويرية ، عن نافع ، عن ابن عمر ، قال : قال النبي صلى الله عليه وسلم لنا لما رجع من الأحزاب : " لا يصلين أحد العصر إلا في بني قريظة " فأدرك بعضهم العصر في الطريق ، فقال بعضهم : لا نصلي حتى نأتيها ، وقال بعضهم : بل نصلي ، لم يرد منا ذلك ، فذكر للنبي صلى الله عليه وسلم ، فلم يعنف واحدا منهم *
அஹ்ஸாப் யுத்தத்திலிருந்து திரும்பியபோது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் பனீ குரைலா வசிக்கும் இடத்தை நீங்கள் அடையும் வரை அஸர் தொழவேண்டாம்எனக்கூறினார்கள். வழியிலேயே அஸர் நேரத்தை அடைந்தோம். பனீ குரைலா வசிக்கும் இடத்தை நாங்கள் அடையும் வரை அஸர் தொழவேண்டாம் என சிலர் கூறினர் வேறு சிலர் இந்த அர்த்தத்தில்  நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை எனவே நாம் தொழுவோம் என்றனர். இந்த விடயம் நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்களில் எவரையும் நபி (ஸல்) அவர்கள் குறை கூறவில்லை.        புகாரி  -  946

حدثنا أبو القاسم عبد الرحمن بن حسن بن أحمد بن محمد بن عبيد الأسدي ، بهمدان ، ثنا عمير بن مرداس ، ثنا عبد الله بن نافع ، ثنا الليث بن سعد ، عن بكر بن سوادة ، عن عطاء بن يسار ، عن أبي سعيد الخدري ، قال : خرج رجلان في سفر فحضرت الصلاة وليس معهما ماء فتيمما صعيدا طيبا ، فصليا ثم وجدا الماء في الوقت فأعاد أحدهما الصلاة والوضوء ولم يعد الآخر ، ثم أتيا رسول الله صلى الله عليه وسلم فذكرا ذلك له ، فقال للذي لم يعد : " أصبت السنة وأجزأتك صلاتك " وقال للذي توضأ وعاد : " لك الأجر مرتين " . " هذا حديث صحيح على شرط الشيخين ،
இரண்டுபேர் பிரயாணம் செய்யும் போது தொழுகை நேரத்தை அடைந்தனர். தண்ணீர் இல்லாததன் காரணமாக தயமம் செய்து தொழுதனர். பின்னர் தொழுகை நேரம் முடிவடையமுன் தண்ணீரைப் பெற்றுக் கொண்டனர். ஒருவர் மீண்டும் வுழு செய்து தொழுகையை மீட்டினார் அடுத்தவர் தொழுகையை மீட்டவில்லை. பின்னர் இருவரும் நபியிடம் வந்து இவ்விடயத்தை கூறினர். எனவே நபி (ஸல்) அவர்கள் தொழுகையை மீட்டாதவரைப் பார்த்து சட்டப்படி(சுன்னா) நீ செய்தது சரி உனது தொழுகைக்கான கூலியை நீ பெற்றுக்கொண்டாய்எனக் கூறினார்கள். மேலும் மீண்டும் வுழு செய்து தொழுகையை மீட்டியவரைப் பார்த்து உனக்கு இரண்டுதடவைகள் கூலியுண்டு எனக் கூறினார்கள்.
المستدرك على الصحيحين للحاكم    (584,592,593)  سنن الدارمي   (777)  سنن أبي داود   (289)

மேலே குறிப்பிடப்பட்ட ஹதீஸ்கள் நியாயமான முறையில் பிக்ஹ்ரீதியான கருத்துவேறுபாடுகள் ஏற்படும்போது பிக்ஹை எவ்வாறு அணுகவேண்டும் எனத் தெளிவாக வழிகாட்டுகின்றது.  முஸ்லிம் சமுதாயம் அனேகமான விடயங்களில் உடண்பாடான கருத்தில் இருந்தாலும் சில விடயங்களில் முரண்பட்டு காணப்படுகின்றார்கள். இவ்வாரான முரண்பாடுகளின் போது மாற்றுக்கருத்து கொண்டவர்களின் ஆதாரங்களும், நியாயங்களும், வாதங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு நபிகளாரின் வழிகாட்டுதல் அடிப்படையில் சரியான கருத்தும், மிகச் சரியான கருத்தும் பிரித்தரியப்படவேண்டும்இந்த ஒரு விடயம் மாத்திரம் தெளிவாக விளக்கப்பட்டிருக்குமானால் சின்னச் சின்ன விடயங்களுக்காகவேண்டி முஸ்லிம் சமுதாயம் கூறு கூறாக பிரிந்திருக்கும் நிலமையோ அல்லது வரண்ட நாட்டுப்புற சிந்தனைக்குப்பின்னால் பாமர மக்கள் இழுபட்டுச் செல்லும் நிலமையோ அல்லது நான் மாத்திரம் தான் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகின்றேன் அடுத்தவர்கள் வழிகேடர்கள் என்ற சிந்தனைச்சிக்களோ ஏற்பட்டிருக்காது.


தொடரும்….

No comments:

Post a Comment