Tuesday, October 28, 2014

பிறந்த உடனே பேசும் அற்புதக் குழந்தைகள்


முஹம்மத் இசாம் (நளீமி)

அறிவியல் வேகமாக வர்ச்சியடைந்து செல்லும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீண்ட கால முயற்ச்சி, ஆழமான ஆய்வு, கடுமையான உழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞானம் கண்டிடுத்த எத்தனையோ அறிவியல் உண்மைகளையும், கோட்பாடுகளையும் அல்குர்ஆன் ஓரிண்டு வங்களில் அழகாகவும், தெளிவாகவும் கூறியிருப்பதைப் பார்த்து எத்தனையோ பேர் நிச்சயமாக இது இறை வேதம்தான் எனக் கூறி இஸ்லாத்தில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளனர்.

புனித அல்குர்ஆனில் பிழை கண்டுபிடிக்க வேண்டும் என முனைபவர்கள், அதிகமாக சுட்டிக்காட்டும் ஒரு சம்பவம்தான் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு. எந்த ஒரு ஆணும் தீண்டாமல் ஒரு குழந்தை பிறப்பது என்பதும், பிறந்த குழந்தை உடனே பேசியது என்பதும் அறிவியலுக்கு முற்று முழுதாக மாற்றமானது,  எனவே இஸ்லாம் இறை வேதம் அல்ல என்பதுவே இவர்களது வாதம். இவர்களது வாதம் சரிதானா?  என்பதை அறிவியல் ஆய்வுகள் அடிப்படையில் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தை உருவாக்கத்துக்கு ஆண்கள் கட்டாயம் என்ற காலம் மலையேறி, ஒரு பெண் மாத்திரமே போதும் என்ற காலத்திலேயே நாம் தற்போது வாழ்கிறோம். அதாவது, ஒரு மனிதனின் உயிரணு அல்லது மரபணுவை எடுத்து ஒரு பெண்ணின் கருவறையில் வைத்து வளர்ப்பதன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம் என்று நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த வழிமுறைதான் குளோனிங்என வழங்கப்படுகின்றது. 1970 களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வழிமுறை, ஆரம்பமாக தவரங்களில் பயன்படுத்தப்பட்டு பாரிய வெற்றியையும் கண்டது.


1996 ஆம் ஆண்டு ஜூலையில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஐயன் வில்மூட், உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார். உயிரணு விஞ்ஞானியான அவர், “டோலிஎன்ற செம்மறி ஆட்டுக் குட்டியை படியாக்கம் மூலம் உருவாக்கினார். இதுவே உலகின் முதல் பாலூட்டி வகைப் படியாக்கம். இதைத் தொடர்ந்து பல விஞ்ஞானிகளும் மனித படியாக்கம் நோக்கித் தமது கவனத்தைத் திருப்பினர். இதன் மூலம் ஏற்படும் பாதக, சாதகங்களை இன்றவும் வாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

இடைக்கிடையே சில விஞ்ஞானிகள் தாம் மனித படியாக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், கூடிய சீக்கிரம் அந்த மனிதனை உலகுக்கு அறிமுகப்படுத்தப் போவதாகவும் அறிக்கை விட்ட வன்னம் உள்ளனர்.
என்றாலும், இதுவரை யாரும் படியாக்க முறை மனிதனைக் கண்டுபிடிக்கவில்லை என்பதுவே உண்மை.  எவ்வாறாயினும், ஒரு ஆண் துணையின்றி குழந்தையை உருவாக்கலாம் என்பதில் அனைத்து விஞ்ஞானிகளும் உடன்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில் ஆண் துணை இன்றிய நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு அறிவியலுக்கு முரண் என்பது ஒரு போலி வாதமாகும்.

நபி ஈஸா (அலை) அவர்கள் பிறந்த உடனே பேசினார் என்பது புராணக் கதை போன்று உள்ளது, இதை ஏற்கவே முடியாது என்று சிலர் இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர். இவர்களது விமர்சனம் உண்மைதானா என ஆராய்வோம்.  இவர்களது வாதம் அறிவியலுக்கு முரணானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமாயின், உயிரணு மற்றும் மரபணு சம்பந்தமான அடிப்படை விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

உயிரணு மூலம் உருவாக்கப்படும் உயிரினத்துக்கும், மரபணு மூலம் உருவாக்கப்படும் உயிரினத்துக்கும் இடையில் நுணுக்கமான சில வித்தியாசங்கள் உள்ளன. உயிரணு முதிர்ச்சி அடையாமல் இருப்பதனால் உருவாக்கப்படும் உயிரினம் சாதாரனமாக இருக்கும். ஆனால் மரபணு முதிர்ச்சி அடைந்து இருப்பதனால் அதன் மூலம் உருவாக்கப்படும் உயிரினத்தின் வு சிறிதாக இருந்தாலும், அனைத்துமே முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கும். 

உங்களுடைய மரபணு மூலம் ஒரு குழந்தை உருவாக்கப்பட்டால், அக்குழந்தை பிறந்த உடனே உங்களைப் போன்றே பேசும், சிந்திக்கும்…  இதை மரபணு மூலம் உருவாக்கப்பட்ட சில உயிரினங்களை அடிப்படையாக வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். எனவே, பிறந்த உடனே ஒரு குழந்தை பேசுவது என்பது அறிவியல் ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும்.

நபி ஈஸா (அலை) இவ்வாறுதான் பிறந்தார்கள், பேசினார்கள் என எம்மால் அடித்துக் கூற முடியாது. என்றாலும், இவை விஞ்ஞானத்துக்கு முரண் இல்லை என அடித்துக் கூறலாம். நபி ஈஸா (அலை) அவர்களின் பிறப்பு பற்றிப் பேசும் வசனத்தில் அல்லாஹ் மரபணு பற்றிய முன்னறிவிப்பையும் சேர்த்தே கூறுகின்றான். 

அதாவது, இவ்வாறான ஒரு படைப்பு எனக்கு மிக இகுவானது என அல்லாஹ் கூறுகின்றான். எனவே, மனிதர்களாகிய உங்களுக்கு சில கஷ்டங்களின் பின் இது முடியும் என்ற முன்னறிவிப்பு இவ்வசனத்தில் மறைந்திருகின்றது.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்

وهذا ما عندي والعلم عند الله تعالى وآخر دعوانا أن الحمد لله رب العالمين


No comments:

Post a Comment