Saturday, September 13, 2014

மீண்டும் ஒரு அலுத்கம வேண்டாம்





பல்லின மக்கள் வாழக்கூடிய இலங்கை நாட்டிலே நாம் மக்கள் பலத்தால் மூன்றாம் இனமாகவும் சிறுபான்மை என்ற அடிப்படையில் இரண்டாம் இனமாகவும் வாழ்ந்து வருகின்றோம். குறிப்பிட்ட சில இடங்களில் சுருங்கிவிடாமல் நாடு பூராகவும் பரந்து விரிந்து வாழ்வதே எமது பிரத்தியோகமான சிறப்பம்சம். இந்தச் சிறப்பம்சம் சில நேரங்களில் எமது பலவீனமாக அமைந்துவிடுகின்றது. இலங்கையில் இஸ்லாமிய கிராமம், முஸ்லிம் சமூகம் என்று பார்க்கின்ற போது முதலில் கண்முன் தோன்றுவது கிழக்கு மாகாணம் தான். வாளைசேனை, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, மருதமுனை, சம்மாந்துரை, சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளச்சேனை, நிந்தவூர் எனப் பல முஸ்லிம் குடியிருப்புக்கள் அங்கே காணப்படுவதை நாம் நன்றாகவே அறிந்துவைத்துள்ளோம். அக்குரனை, பேருவலை, திஹாரி என்பன கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க சனத்தொகை கொண்ட முஸ்லிம் கிராமங்களாகும். இவை தவிர நாடு பூராகவும் சிறிய சனத்தொகை கொண்ட பல முஸ்லிம் கிராமங்களும் குடியிருப்புக்களும் பரவிக்கிடப்பது கண்கூடு.


இவ்வாறான முஸ்லிம் குடியிருப்புக்களில் அதிகமானவை பிரதான நகரங்களையும், பாதைகளையும், கடைத்தொகுதிகளையும் மற்றும் மக்கள் அதிகமாக புலங்குகின்ற இன்னோரன்ன இடங்களையும் அண்டி அமைதிருப்பதை அவதானிக்க முடியுமாக உள்ளது. இவ்வாறு ஏனையவர்களுடன் குறிப்பாக அன்னிய மதத்தவர்களுடன் கலந்துவாழுகின்ற ஒரு முஸ்லிம் பாதைகளிலும், பொது இடங்களிலும் இஸ்லாம் எவ்வாறு நடக்கவேண்டும் என கற்றுத்தந்த போதனைகளை அறிந்து நடைமுறைப் படுத்துவது காலத்தின் தேவையாகும். இதைப் புறக்கணிப்பது முஸ்லிம் சமுதாயத்தின் இருப்புக்கே அச்சுறுத்தல் என்பதை அண்மைகால நிகழ்வுகள் எமக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது. பாதையில் கடைபிடிக்கவேண்டிய  சில இஸ்லாமிய ஒழுங்குகளில் எமக்கு ஏற்பட்ட பொடுபோக்கு முள்ளுக்காக அலையும் நாயைப் போன்று சந்தர்ப்பத்துக்காக அலைந்து திரிந்த சில காட்டுமிரான்டிகளுக்கு சந்தர்ப்பமாக மாறியதையும் அதன் விளைவாக மூன்று ஈமானிய உயிர்கள் பரிக்கப்பட்டதையும் எம்மால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது.

எமது பிள்ளைகளையும், பெண்களையும், உற்றார் உறவினர்களையும் ஈமானிய உறவுகளையும், வணகஸ்தளங்களையும், சொத்து செல்வங்களையும் பாதுகாப்பது எமது கடமை. எனவே பாதைகளிலும், பொது இடங்களிலும் இஸ்லாம் எவ்வாறு நடக்கவேண்டும் எனக் கற்றுத்தந்த விடயங்களில் சிலதை விளக்குவதெற்காகவே இந்த ஆக்கத்தை வரைகிறேன். இவற்றை அறிந்து, நடைமுறைப் படுத்துவதனால் அந்நியர்களின் குரோதங்கள் நீங்குகின்றதோ இல்லையோ மீண்டும் ஒரு முறை உடனடிச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதவர்களாகவாவது எம்மால் மாறமுடியும்.
பெரும்பாலான இஸ்லாமிய சட்டங்கள் பிறர் நலம் பேணுதல் என்ற அடிப்படையின் மீது தான் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பாதைகளிலும் பொது இடங்களிலும் பிறர்நலன் பேணும் வகையில் இஸ்லாம் பல விடயங்களை கற்றுத்தருகின்றது.

ஒரு முறை அகிலத்தாரின் அருட்கொடை إياكم والجلوس على الطرقات"பாதைகளில் அமர்வதைவிட்டும் (பிறருக்கு இடைஞலாக நிற்றல்) உங்களை நான் எச்சரிக்கின்றேன் என்று கூறினார்கள். அதற்கு உத்தம தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே பாதைகளில் அறவே நிற்கக்கூடாதா??” எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் فأعطوا الطريق حقها தேவைகளுக்காக  நிற்கலாம் என்றாலும் பாதைகளுக்குறிய உரிமைகளைக் கொடுத்துவிடுங்கள்" என்றார்கள். அதற்கு உத்தம தோழர்கள் وما حق الطريق ؟பாதையின் உரிமைகள் என்ன?? எனக் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பின்வரும் நான்கு விடயத்தைக் கூறினார்கள்.
1 பார்வையைத் தாழ்த்துதல்  (غض البصر)
2 இடைஞல் தரக்கூடியதை நீக்குதல் (وكف الأذى)
3 சலாதுக்குப் பதில் கூறுதல் (ورد السلام)
4 நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (وأمر بالمعروف ، ونهي عن المنكر)புகாரி – 2465

பிரதான நகரங்களையும், பாதைகளையும், கடைத்தொகுதிகளையும் மற்றும் மக்கள் அதிகமாக புலங்குகின்ற இன்னோரன்ன இடங்கலையும் அண்டி வாழ்கின்ற முஸ்லிம்கள் இந்த விடயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். இந்த நான்கு விடயங்களில் இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ள விடயம் பிறர் நலத்துடன் நேரடியாக தொடர்புபடுவதால் இதை சற்று விரிவாக நோக்குவோம். நபி(ஸல்) அவர்களின் ஒரு சிரிய சொல்கூட ஒரு பெரிய சமுதாயத்தையே வழிநடத்தும் விரிந்த பரந்த கருத்துக்களைக் கொண்டது. பிறருக்கு இடைஞல் செய்யாது இருஎன்ற நபியின் சொல்லை வெறுமனே முள்ளோடும் கல்லோடும் சுறுக்கிவிடாமல் விரிந்த பரந்த கருத்தில் நோக்கப்பட வேண்டும். பாதையில் போடப்படும் குப்பைகளாக இருக்கலாம், பாதையைப்பிடித்துக் கட்டப்படும் கட்டிடங்களாக இருக்கலாம், மக்களை நடமாடவிடாமல் நிறுத்தப்படும் வாகனங்களாக இருக்கலாம் அல்லது வாகனங்களை நடமாட விடாமல் நடமாடும் மனிதர்களாக இருக்கலாம் அனைத்துமே பிறருக்கு இடைஞல் செய்யாது இரு என்று நபி காட்டிய பாதை ஒழுக்குகளுடன் சம்மந்தப்பட்டவையாகும்.

குதிரை போன்று பல அந்நிய ஊர்களை கடந்துவரும் வாகனங்கள் முஸ்லிம் ஊர்களை கடக்கும்போது ஆமைகலாய் மாறிவிடுகின்றன. அமைதியாகவும், சாந்தமாகவும் இருந்த பயணிகள் முஸ்லிம் கிராமங்களை கண்டவுடனே ஒரு வகையான தொந்தரவையும் கஷ்டத்தையும் உணர்கின்றனர். பலர் மனதால் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், சிலர் மனதுக்குள்ளால் முஸ்லிம்களை திட்டித்தீர்த்து தனது கஷ்டத்திக்கு பரிகாரம் தேடுகின்றனர், இன்னும் சிலர் பொறுமையை இழந்து சீறிப்பாய்கின்றனர். இதைச் சில விஷமிகள் திசைத்திருப்பி  அரசியல் இலாபம் காணுகின்றனர். இவ்வாறுதான் அலுத்கம கொலைக் களமாக்கப்பட்டது. கோடிக்கணக்கான சொத்துக்களும், மதிப்பை தான்டிய 3 ஜீவன்களும் அழிக்கப்பட்டன. எஞ்சிய நாங்கள் மிஞ்சிய நாட்களில் நிம்மதியாக வாழவேண்டும். எங்கள் பிள்ளைகள் இனிவரும் காலங்களில் சுதந்திரக்காற்றை சுவாசிக்க வேண்டும். எனவே எம்மால் முடியுமானளவு பிறர் நலனைக் கருத்தில்கொண்டு எமது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வோமாக…..!

No comments:

Post a Comment